வரலாறு - டெல்லி சுல்தான், அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 1

Mr. A M
0

 அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள் 

வரலாறு - டெல்லி சுல்தான் 



இபான் பதூதா ……….காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்.

(A) முஹம்மத் பின் துக்ளக்  (C) கியாலீத்தீன் துக்ளக்

(B) பெரோஸ்ஷா துக்ளக்     (D) ஷம்ஸீத்தின் முஹம்மத்

 

ANSWER A

 

கீழ்கண்டவைகளில் தௌலதபாத் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

1. தௌலதபாத் என்றால் செல்வம் கொழித்த நகரம் என்று பெயர்.

2. தௌலதபாத்தின் மற்றொரு பெயர் தேவகிரி.

3. முகமது பின் துக்ளக் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார்.

4. தௌலதபாத், பாமினி அரசின் ஒரு பகுதியாகும்.

(A) 1 மட்டும்

(B) 2 மட்டும்

(C) 3 மட்டும்

(D) 1, 2, 3, 4

 

ANSWER D

 

கி.பி. 1191 முதல் தரைன் போரில் ஆஜ்மீர் அரசர் பிரித்விராஜ் சௌகான்

(A) முகமது கோரியை தோற்கடித்தார்

(B) முகமது கோரி வெற்றி பெற்றார்

(C) முதல் தரைன் போர் கி.பி. 1191 -ல் நடைபெறவில்லை

(D) இவை அனைத்தும் இல்லை

 

ANSWER A

 

டெல்லி சல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?

(A) இக்ததாரி         (B) மன்சப்தாரி

(C) கபதாரி                 (D) ஜமீஸ்தாரி

 

ANSWER A

 

டெல்லியில் முதல் ஆப்காள் ஆட்சியை நிறுவியவர்

(A) மாவிக் பர்ஹாம்

(B) மாலிக் மர்தான் தௌலத்

(C) பஹலுல் லோடி

(D) இஸ்லாம் காள்

 

ANSWER C

 

 

தொல் மங்கோலியர்கள் இமயமலையின் விளிம்பு பகுதியில் வாழ்த்து வருகின்றனர். கீழ் உள்ள எந்த பழங்குடியினர் தொல் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள்?

I.     நாகர்கள்

II.   சக்மாக்கள்

III. லெப்சா

IV. தோடர்கள்

(A),   I, II மற்றும் III மட்டும்        (B) I, II மற்றும் IV மட்டும்

(c),   II, III மற்றும் IV மட்டும்       (D),   I, III மற்றும் IV மட்டும்

 

ANSWER A

 

சூஃபிஸம்……… மதத்திலிருந்து தோன்றி வளர்ந்தது.

(A) கிறிஸ்துவம்

(B) இந்து

(C) இஸ்லாம்

(D) ஜொராஸ்டிரியானிசம்

 

ANSWER C

 

 

அமீர்குஸ்ரு எந்த நகரத்தை இரண்டாம் சொர்க்கம் மற்றும் மிகச் சிறந்த நிதி பரிபாலண மையம் என குறிப்பிட்டார்?

(A) மதுரா

(B) ஆக்ரா

(C) காஷ்மீரகம்

(D) டெல்லி

 

ANSWER D

 

கீழ்வருபவற்றுள் அரசரின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை முன்வைத்த முதல் அரசர் யார்?

(A) அலாவுதீன் கில்ஜி       (C) இல்ட்டுமிஷ்

(B) பால்பன்          (D) இரஷியா

 

ANSWER B

 

கலிஃபாக்களிடமிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்ட டெல்லி அரசர் யார்?

 (A) குத்புதின் –ஐபக்         (C) பால்பன்

(B) இல்டுட்மிஷ்            (D) இரஷ்யா பேகம்

 

ANSWER B

 

அலாவுதின் கில்ஜியின் பின்வரும் பிராந்திய வெற்றிகளை முறையான கால வரிசைப்படி எழுதுக.

I.    ரன்தம்போர்

II.  மால்வா

III. சித்தூர்

IV. குஜராத்

(A) IV, I, III, II         (B) I, III, IV, II

(C) I, II, III, IV         (D) IV, III, II, I

 

ANSWER A

 

மகமது கவான் எந்த குற்றத்துக்காக கொல்லப்பட்டார்

(A) கொலை

(B) நடத்தை-விபச்சாரம்

(C) போலியான தேசத்துரோக குற்றச்சாட்டு

(D) திருட்டு

 

ANSWER C

 

மற்ற அரசர்களுக்கு ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள் இருக்கலாம். எனக்கோ பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் இருக்கின்றனர். அதாவது, அவர்கள்தாம் என்னுடைய துருக்கிய அடிமைகள்; அவர்கள்தாம் என்னுடைய ஆட்சிப் பகுதிகளுக்கு வாரிசுகள்; அப்பகுதிகளில் எல்லாம் என் பெயரை குத்பா (Khutba) அழியாவண்ணம் 'பாதுகாப்பர்என்ற வாக்கியத்தை கூறியது யார்?

(A) பஹாஹயுத்தீன் குர்ஷப்

(B) கஜினியின் மஹ்மூத்

(C) ஷிஹாபுத்தீன் முஹம்மத்

(D) குத்புத்தீன் ஐபெக்

 

ANSWER C

 

தைமூர் படையெடுப்பின் போது டில்லி சுல்தானில் சுல்தானாக இருந்தவர் பெயர்?

(A) தௌலத் கான் லோடி

(B) கியாசுதின் துக்ளக்

(C) பெரோஸ் ஷா துக்ளக்

(D) நஸீரூதின் முகமது ஷா துக்ளக்

 

ANSWER D

 

'கிதப்-இ-நவ்ரஸ்' என்பது ……….என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.

(A) இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா

(B) இரண்டாம் அகமது

(C) தாஜ்யத்-தின் பெருஸ்

(D) இரண்டாம் முகமது

 

ANSWER A

 

கி.பி. 1504 இல் நிறுவப்பட்ட ………. நகரத்திற்கு. சிக்கந்தர் லோடி அடித்தளமாக இருந்தார்.

(A) தோல்புர்

(B) குவாலியர்

(C) ஈட்டாவா

(D) ஆக்ரா

 

ANSWER D

 

சயத் பேரரசில் முபராக் ஷா திறமையான அரசர்

(a) வெளிநாட்டு அதிகாரத்திலிருந்து டெல்லி சுல்தானியத்தை விடுதலை செய்தவர்

(b) உயர்குடியில் பிறந்தவர்கள் மற்றும் ஜாகிர்தார்கள் ஏற்படுத்திய கிளர்ச்சியை அடக்கியவர்

(A) (a)

(B) (b)

(C) (a) மற்றும் (b)

(D) மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

 

ANSWER C

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top