TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 1

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 1


1. சந்திப் பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.

1. தகவல்களைத் திரட்டு

2. தகவல்களை திரட்டு

3. முதியவருக்குக் கொடு

4. முதியவருக்கு கொடு

 

(A) 1 மற்றும் 3     (C) 3 மற்றும் 4

(B) 2 மற்றும் 3     (D) 1 மற்றும் 4

(A) 1 மற்றும் 3

 

2. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

விருந்தினர் ஒருவர் வந்தால் அவரை வியந்து உரைத்தல் நன்று

(A) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், விருந்தினர், வியந்து

(B) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், வியந்து, விருந்தினர்

(C) அவரை, உரைத்தல், ஒருவர், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று

(D) அவரை, ஒருவர், உரைத்தல், வந்தால், வியந்து, விருந்தினர், நன்று

(B) அவரை, உரைத்தல், ஒருவர், நன்று, வந்தால், வியந்து, விருந்தினர்

 

3. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க: “நட”

(A) நடந்து              (C) நடத்தல்

(B) நடப்பான்       (D) நடந்தவன்

(C) நடத்தல்

 

4. வேர்ச்சொல்லின் வினையெச்சம் கண்டறிக: "தா"

(A) தந்தான்        (C) தந்த

(B) தந்து               (D) தரல்

(B) தந்து

 

5. வேர்ச்சொல்லைக் கொடுத்து வினையெச்சம் உருவாக்கல்

கொடு

(A) கொடுத்தான்            (C) கொடுத்து

(B) கொடுக்கிறான்        (D) கொடுத்த

(C) கொடுத்து

 

6. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க: "காண்"

(A) கண்டான்            (C) கண்ட

(B) கண்டு                   (D) காணல்

(D) காணல்

 

7. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

வென்றார்

(A) வென்              (C) வெல்

(B) வென்று          (D) வெள்

(C) வெல்

 

8. வந்தவர் - என்பதன் வேர்ச்சொல் எழுதுக.

(A) வரு               (C) வா

(B) வருதல்        (D) வந்த

(C) வா

 

9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

வருகிறான்

(A) வரு           (C) வருதல்

(B) வா            (D) வருகி

(B) வா 

 

10. ஒரு பொருள் தரும் பல சொற்கள்

போது, அலர், வீ, செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

(A) பூவின் நிலைகள்              (C) பிஞ்சு வகைகள்

(B) இளம் பயிர் வகைகள்    (D) இலை வகைகள்

(A) பூவின் நிலைகள்

 

11. பொருள் வேறுபாடறிந்து பொருளைத் தேர்வு செய்க.

பனி பணி

(A) குளிர்ச்சி, வேலை     (C) பாறை, பாம்பு

(B) வேலை, குளிர்ச்சி     (D) குளிர்ச்சி, வெப்பம்

(A) குளிர்ச்சி, வேலை

 

12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க.

அலை - அழை

(A) கடலலைஅழகு                       (B) கடலலை வரவழைத்தல்

(C) வரவழைத்தல் – கடலலை     (D) சேறு - வரவழைத்தல்

(B) கடலலை வரவழைத்தல்

 

13. மனம், மணம் ஒலி வேறுபாடறிந்து பொருளைத் தேர்க

(A) மனசாட்சி, எண்ணம்         (B) எண்ணம், உள்ளம்

(C) உள்ளம், வாசனை               (D) மாற்றம், செயல்

(C) உள்ளம், வாசனை

 

14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

Objective

(A) குறிக்கோள்           (C) நம்பிக்கை

(B) ஒப்பந்தம்                (D) பொருள்கோள்

(A) குறிக்கோள்

 

15. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிவு செய்.

Artifacts

(A) அழகியல்                         (C) தொன்மம்

(B) கலைப் படைப்புகள்   (D) கலையியல்

(B) கலைப் படைப்புகள்

 

16. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

(a) Consumer  1. பண்டம்

(b) Merchant   2. நுகர்வோர்

(c) Commodity 3. பாரம்பரியம்

(d) Heritage   4. வணிகர்

(a) (b) (c) (d)

            (A) 1 4 3 2

            (B) 4 1 2 3

            (C) 2 3 1 4

            (D) 2 4 1 3

(D) 2 4 1 3

 

17. சரியான வினைமரபைத் தேர்க.

வளவன் பழம் சாப்பிட்டான்

(A) உண்டான்      (C) பருகினான்

(C) தின்றான்       (D) அருந்தினான்

(C) தின்றான்

 

18. பிழை நீக்கி எழுதுக.

சிங்கக் குட்டியையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.

(A) சிங்கக் குருளையையும், யானைக்கன்றையும் பார்த்தேன்.

(B) சிங்கக் குருளையையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.

(C) சிங்கக் குருளையையும், யானைக்குருளையையும் பார்த்தேன்.

(D) சிங்கக் கன்றையும், யானைக் கன்றையும் பார்த்தேன்.

(A) சிங்கக் குருளையையும், யானைக்கன்றையும் பார்த்தேன்.

 

19. எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின.

-பிழையை நீக்குக.

(A) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

(B) என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மனம் வீசின.

(C) எண் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.

(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

(D) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

 

20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) ஊசல்           (C) சிறுபறை

(B) சிற்றில்        (D) சிறுதேர்

(A) ஊசல்

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top