TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 12
21. 'வீடு எங்குள்ளது' என்ற வினாவிற்கு 'இப்பக்கத்தில் உள்ளது' என்று கூறுவது.
(A) சுட்டு விடை (C) நேர் விடை
(B) மறை விடை (D) ஏவல் விடை
(A) சுட்டு விடை
22. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
சோறு …………………….
(A) உண் (C) பருகு
(B) தின் (D) சாப்பிடு
(A) உண்
23. சந்திப்பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
(1) குதிரைத் தாண்டியது
(2) குதிரை தாண்டியது
(3) வரும்படி சொன்னான்
(4) வரும்படிச் சொன்னான்
(A)
(1) மற்றும் (3) (C)
(2) மற்றும் (3)
(B)
(2) மற்றும் (4) (D)
(1) மற்றும் (4)
(C) (2) மற்றும் (3)
24. மரபுப்பிழைகள் ஏற்புடைய ஒலி மரபினைத் தேர்க:
‘ஆடு’
(A) முழங்கும் (C) கதறும்
(B) பிளிறும் (D) கத்தும்
(D) கத்தும்
25. குலைவகை: பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்:
(A) கொத்து (C) தாறு
(B) அளியல் (D) அலகு
(B) அளியல்
26. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
நீர்நிலைப் பெயர் அல்லாதது.
(A) இலஞ்சி (C) கூவல்
(B) கேணி (D) கோட்டி
(D) கோட்டி
27. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(A) பால் – பசு (C) காளை - வண்டி
(B) எருது – உழவு (D) ஆடு - வண்டி
(D) ஆடு - வண்டி
28. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
'இடும்பை' - எதிர்ச்சொல் தருக.
(A) வறுமை (C) துன்பம்
(B) இன்பம் (D) சோம்பல்
(B) இன்பம்
29. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்:
‘அணுகு'
(A) பழகு (C) விலகு
(B) தெளிவு (D) துணிவு
(C) விலகு
30. பிரித்தெழுதுதல்:
'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது.
(A) நீரு + உலையில் (C) ரீ நீர் + உலையில்
(B) நீர் + இலையில் (D) நீரு + இலையில்
(C) ரீ நீர் + உலையில்
31. செயல் + இழக்க என்பதனை சேர்த்து - எழுதக் கிடைக்கும் சொல்.
(A) செயலிழக்க (C) செயஇழக்க
(B) செயல்இழக்க (D) செயலிலக்க
(A) செயலிழக்க
32.. சரியான விடையைத் தேர்க.
(A) விண் + உண்டு – விண்ணூண்டு (C)
நூல் + அகம் - நூற்பகம்
(B) பண் + அழகு பண்ணழகு (D)
விண் + அழகு - விற்பழகு
(B) பண் + அழகு பண்ணழகு
33. பிரித்து எழுதுதல்:
"பெருங்கடல்" - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) பெரு + கடல் (C) பெரிய + கடல்
(B) பெருமை + கடல் (D) பெருங் + கடல்
(B) பெருமை + கடல்
34. முத்தமிழ் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
(A) இயற்றமிழ் (C) நாடகத்தமிழ்
(B) இசைத்தமிழ் (D) வளர்தமிழ்
(D) வளர்தமிழ்
35. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:
நெல்லையப்பர் கோவில் ………. உள்ளது?
(A) எவை? (C) யாது?
(B) எது? (D) எங்கு?
(D) எங்கு?
36. பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக:
மாடுகள் இப்பொழுது புல்
(A) மேய்ந்தன (C) மேய்கின்றன
(B) மேய்கிறது (D) மேய்கின்றோம்
(C) மேய்கின்றன
37. பொருத்தமான காலம் கண்டறிக.
(A) கண்மணி நேற்று பாடம் படித்தாள் (நிகழ்காலம்)
(B) கண்மணி பாடம் படிக்கிறாள் (நிகழ்காலம்)
(C) கண்மணி நாளை பாடம் படிப்பாள் (இறந்த காலம்)
(D) கண்மணி இன்று படிக்கிறாள் (எதிர்காலம்)
(B) கண்மணி பாடம் படிக்கிறாள் (நிகழ்காலம்)
38. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:
சரியான ணையைக் கண்டறிக.
(A) விண் + மீன் – விண்மான் (C)
நீதி + நூல் - நீதிநூல்
(B) தமிழ் + மொழி –தாய்மொழி (D)
மணி + மாலை - மணிமேகலை
(C) நீதி + நூல் - நீதிநூல்
39. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக:
'பரம்' ………………..
(A) பரை (C) குறை
(B) பறை (D) முறை
(A) பரை
40. பேச்சுவழக்கு - எழுத்துவழக்கு கண்டறிதல்:
என்னுடைய பல் உழுந்திடுச்சு.
(A) விளந்து விட்டது (C) விழுந்து விட்டது
(B) வில்ந்து விட்டது (D) விலைந்து விட்டது
(C) விழுந்து விட்டது