TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 14

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 14

61. பொருத்தமான செயப்பாட்டு வினைத் தொடரைத் தேர்க.

(A) பணம் காணாமல் போனது   (C) பணத்தை யார் எடுத்தார்கள்?

(B) பணத்தைக் காணவில்லை    (D) பணத்தை எங்கே தேடுவது?

(A) பணம் காணாமல் போனது

 

62. காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்' எனப் பாராட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.

விடைக்கேற்ற மிகச் சரியான வினாவைத் தேர்ந்தெடுக்க.

(A) 'கல்விக் கண் திறந்தவர்' என்று பாராட்டப்பட்டவர் யார்?

(B) தந்தை பெரியார் யாரைப் பாராட்டினார்?

(C) தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?

(D) காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்” எனப் பாராட்டியவர் யார்?

(D) காமராசரைக் 'கல்விக்கண் திறந்தவர்” எனப் பாராட்டியவர் யார்?

 

63. விடைக் கேற்ற வினாவைத் தெரிவு செய்க:

'தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்'.

(A) உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எங்குள்ளது?

(B) உங்களுக்கு மிகவும் பிடித்த நூல் எத்தனை?

(C) உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?

(D) புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா?

(C) உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?

 

64. இசைக் கருவிகள் எத்தனை வகைப்படும்?

(A) நான்கு   (C) மூன்று

(B) இரண்டு (D) ஒன்று

(A) நான்கு

 

65. நரம்புக் கருவிகள் எவை?

(A) தோலால் மூடப்பட்ட கருவி

(B) தந்திகளை உடையவை

(C) காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை

(D) ஒன்றோடு ஒன்று மோதி கொள்பவை

(B) தந்திகளை உடையவை

 

66. ஒன்றோடு ஒன்றி மோதி இசைக்கப்படுபவை

(A) நரம்புக் கருவிகள்     (C) கஞ்சக் கருவிகள்

(B) தோல் கருவிகள்         (D) காற்றுக் கருவிகள்

(C) கஞ்சக் கருவிகள்

 

67. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை

(A) தோல் கருவிகள்        (C) கஞ்சக் கருவிகள்

(B) காற்றுக் கருவிகள்    (D) நரம்புக் கருவிகள்

(B) காற்றுக் கருவிகள்

 

68. விலங்குகளின் ………………. ஆல் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோற்கருவிகள்.

(A) தோல்         (C) நகம்

(B) முடி              (D) எலும்பு

(A) தோல்

 

69. ஒருமை - பன்மை பிழை நீக்குக:

அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ………… உழைப்பை நல்கினார்.

(A) தனது

(B) தமது

(C) தங்கள்

(D) தாங்கள்

(B) தமது

 

70. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

(A) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது

(B) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தன

(C) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தான்

(D) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தார்கள்

(A) இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது

 

71. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(A) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது

(B) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

(C) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறப்பாள்

(D) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறப்பார்கள்

(A) ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது

 

72. சொல்-பொருள் பொருத்துக:

(a) சாந்தம்         (1) சிறப்பு

(b) மகத்துவம்      (2) உலகம்

(c) தாரணி         (3) கருணை

(d) இரக்கம்        (4) அமைதி

(a) (b) (c) (d)

(A) 2 3 4 1

(B) 3 2 1 4

(C) 4 1 2 3

(D) 1 4 3 2

(C) 4 1 2 3

 

73. சொல் - பொருள் பொருத்துக:

(a) தமர்       (1) தலை

(b) முனிவு  (2) உறவினர்

(c) தார்        (3) சினம்

(d) முடி        (4) மாலை

 

(a) (b) (c) (d)

(A) 2 3 4 1

(B) 2 4 3 1

(C) 4 3 2 1

(D) 1 2 3 4

(A) 2 3 4 1

 

74. பிழை திருத்தம் (ஒரு-ஓர்)

பிழை திருத்தம் (அது-அஃது; ஒரு-ஓர்)

அது ஒரு இனிய பாடல்.

(A) அது ஓர் இனிய பாடல்        (C) அஃது ஒரு இனிய பாடல்

(B) அஃது ஓர் இனிய பாடல்     (D) அது ஒரு இனிய பாடல்

(B) அஃது ஓர் இனிய பாடல்

 

75. பிழை திருத்துக:

ஓர் அணில் மரத்தில் ஏறின.

(A) ஓர் அணில் மரத்தில் ஏறியது      (C) ஓர் அணில் மரத்தில் ஏறா

(B) ஓர் அணில் மரத்தில் ஏறின          (D) ஓர் அணில் மரத்தில் ஓடா

(A) ஓர் அணில் மரத்தில் ஏறியது

 

76. சரியான தொடரைத் தேர்ந்தெடு: ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?

(A) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

(B) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

(C) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

(D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்

(D) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்

 

77. 'அப்துல் நேற்று வந்தான்' - இது எவ்வகைத் தொடர்?

(A) தன்வினைத் தொடர்   (C) செய்தித் தொடர்

(B) பிறவினைத் தொடர்    (D) உடன்பாட்டு வினைத் தொடர்

(A) தன்வினைத் தொடர்

 

78. சொற்களை மாற்றியமைத்து சரியான தொடரைத் தேர்ந்தெடு.

(A) முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்

(B) உணர்ந்தவர்கள் நம் முக்காலமும் முன்னோர்கள்

(C) முன்னோர்கள் நம் உணர்ந்தவர்கள் முக்காலமும்

(D) முக்காலமும் முன்னோர்கள் நம் உணர்ந்தவர்கள்

(A) முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்

 

79. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக.

'வெற்றிலை'

(A) வயல்               (C) தோப்பு

(B) கொல்லை     (D) தோட்டம்

(D) தோட்டம்

 

80. பொருத்துக:

(a) முள்          (1) சோலை

(b) பூ               (2) காடு

(c) பனம்       (3) புதர்

(d) தேயிலை (4) தோட்டம்

 

(a) (b) (c) (d)

(A) 3 1 2 4

(B) 1 2 3 4

(C) 3 2 1 4

(D) 2 1 3 4

(A) 3 1 2 4

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top