TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 15
81. சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண்.
'பசு'
(A) பசுக்கள் (C) பசுகள்
(C) ஆநிரை (D) கூட்டம்
(C) ஆநிரை
82. கத்தும் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்று பாடியவர் யார்?
(A) வாணிதாசன் (C) பாரதியார்
(B) வியாசபாரதி (D) பாரதிதாசன்
(C) பாரதியார்
83. நேர் பொருளை தேர்வு செய்க.
(A) காருகர் - ஓவியர்
(B) மண்ணீட்டாளர் - சாலியர்
(C) ஓசுநர் - எண்ணெய் விற்போர்
(D) பாசவர் - சிற்பி
(C) ஓசுநர் - எண்ணெய் விற்போர்
84. கலைச் சொற்களை அறிதல்:
கலைச் சொற்களைப் பொருத்துக.
(a)
Religion (1) FF6055
(b)
Charity (2) வாய்மை
(c)
Simplicity (3) சமயம்
(d)
Sincerity (4) எளிமை
(a)
(b) (c) (d)
(A) 1
2 3 4
(B) 3
1 4 2
(C) 4
2 1 3
(D) 2
3 4 1
(B) 3 1 4 2
85. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:
'Revivalism'
(A) மீட்டுருவாக்கம் (C) மறுமலர்ச்சி
(B) நம்பிக்கை (D) மெய்யியலாளர்
(A) மீட்டுருவாக்கம்
86. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
'Antibiotic'
(A) ஒவ்வாமை
(B) மரபணு
(C) நுண்ணுயிர் முறி
(D) சிறு தானியங்கள்
(C) நுண்ணுயிர் முறி
87. கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று 1: ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
காரணம் 1: ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின்
தொகுப்பு என்பது பொருள்.
காரணம் 2: நான்கு வேதங்களுள் ஒன்று.
(A) கூற்று தவறு காரணம் 1, 2 சரி
(B) கூற்று தவறு காரணம் 1, 2 தவறு
(C) கூற்று சரி காரணம் 1 சரி 2
தவறு
(D) கூற்று சரி காரணம் 1 சரி 2 சரி
(C) கூற்று சரி காரணம் 1 சரி 2 தவறு
88. கூற்று (i) கா - என்பதற்கு பாரந்தாங்கும் கோல் என்று
பொருள்.
கூற்று (ii) தோளில் சுமந்து ஆடுவது
காரணம் : சேர்வையாட்டம் - வழிபாட்டுக் கலையாக நிகழ்த்துகின்றனர்.
(A) அனைத்தும் சரி
(B) அனைத்தும் தவறு
(C) கூற்று (i), (ii) - சரி காரணம் தவறு
(D) கூற்று (i), (ii) - தவறு காரணம் சரி
(C) கூற்று (i), (ii) - சரி காரணம் தவறு
89. கூற்று: நேவிக் என்ற செயலியை விமான பயணத்திற்காக உருவாக்கி இருக்கிறோம்.
காரணம்: வானில் எல்லை தாண்டினால் உடனடியாக எச்சரிக்கும்.
(A) கூற்று தவறு காரணம் சரி
(B) கூற்று, காரணம் இரண்டும் சரி
(C) கூற்று சரி காரணம் தவறு
(D) கூற்று தவறு காரணம் தவறு
(D) கூற்று தவறு காரணம் தவறு
90. குறில், நெடில் மாற்றம், பொருள்
வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்வு
செய்க:
கொள், கோள்
(A) எடுத்துக் கொள், ஒன்பது கோள்கள்
(B) நவக்கிரகம், அசுப கிரகம்
(C) கிரகப்பிரவேசம், சுபம்
(D) படுத்துக்கொள், உறங்கு
(A) எடுத்துக் கொள், ஒன்பது கோள்கள்
91. குறில், நெடில் மாற்றம் - பொருள் வேறுபாடு அறிக:
வலி வாலி
(A) துன்பம் - இந்திரன் மகன்
(B) காற்று - இந்திரன் மகன்
(C) அடி - இந்திரன் மகன்
(D) பாதை - இந்திரன் மகன்
(A) துன்பம் - இந்திரன் மகன்
92. குறில் நெடில் மாற்றம் - வேறுபாடு
வலை - வாலை
(A) மீன்வலை - பறவை
(B) மீன்வலை - ஆமை
(C) மீன்வலை - இளம்பெண்
(D) மீன்வலை - தெய்வம்
(C) மீன்வலை - இளம்பெண்
93. இருபொருள் தருக:
'உரம்'
(A) வலிமை, வரி (C)
வலிமை, எரு
(B) வலிமை, மூங்கில் (D)
வலிமை, வணங்கு
(C) வலிமை, எரு
94. இருபொருள் தருக:
இடி - இருபொருள் தருக.
(A) வானம் - சேர்த்தல்
(B) நீர்நிலை - சேர்த்தல்
(C) மலை - சேர்த்தல்
(D) பேரொலி - தகர்த்தல்
(D) பேரொலி - தகர்த்தல்
95. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (பொருள்)
(A) தமிழ் மொழிச் சொற்களில் மரபு மாறினால் …………….. மாறிவிடும்.
(B) தமிழ் மொழிச் சொற்களில் வார்த்தை மாறினால் …………….. மாறிவிடும்.
(C) தமிழ் மொழிச் சொற்களில் எழுத்து மாறினால் …………….. மாறிவிடும்.
(D) தமிழ் மொழிச் சொற்களில் வடிவம் மாறினால் …………….. மாறிவிடும்.
(A) தமிழ் மொழிச் சொற்களில் மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.
96. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (இணுக்கு)
(A) கீரை, வாழை முதலியவற்றின் அடி ……… என்பர்.
(B) குச்சியின் பிரிவு ……… என்பர்.
(C) காய்ந்த இலை ……… என்பர்.
(D) நெல், புல் முதலியவற்றின் கொழுந்து ……… என்பர்.
(B) குச்சியின் பிரிவு இணுக்கு என்பர்.
97. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(கரைவிளக்கு)
(A) தொலைவில் கலங் ………… த்தின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.
(B) தொலைவில் கலங் ………… த்தின் ஒளி உயர்மதில் சுவரை இடிக்கின்றது.
(C) தொலைவில் கலங் …………….. த்தின் ஒளி உயர்மதில் சுவரை வளர்க்கின்றது.
(D) தொலைவில் கலங் ………….. த்தின் ஒளி உயர்மதில் சுவரை இழுக்கின்றது.
(A) தொலைவில் கலங் கரைவிளக்கு த்தின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.
98. சரியான இணைப்புச் சொல் தேர்க:
அனுமாரின் ஆட்டம் தாளகரிக்கு இணங்கி வருவது மகிழ்ச்சியளித்தது
……………….
நேரம் ஆக ஆக அடி தப்பியது.
(A) ஏனெனில் (C) ஆனால்
(B) எனவே (D) ஆகையால்
(C) ஆனால்
99. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு:
சண்முகம் இன்று வீட்டிற்கு வரமாட்டான் ………….. சென்னைக்குச்
செல்கிறான்.
(A) ஏனென்றால் (C) ஆனால்
(B) எனவே (D) அதனால்
(A) ஏனென்றால்
100. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
நெல்லையப்பர் கோவில் ……………… உள்ளது?
(A) எதனால் (C) யாரால்
(C) எங்கு (D) எவை
(C) எங்கு