TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 16
1.
"உனக்குக் கதை எழுதத் தெரியுமா”? என்ற
வினாவிற்கு “கட்டுரை எழுதத் தெரியும்” என விடையளிப்பது
(A) சுட்டு விடை (C) மறை விடை
(B) நேர் விடை (D) இனமொழி விடை
(D) இனமொழி விடை
2. சரியான விடை வகையை தெரிவு செய்க.
“இது செய்வாயா?” என்ற வினாவிற்கு “நீயே செய்” என்று
விடை கூறுவது
(A) சுட்டு விடை (C) இனமொழி விடை
(B) நேர் விடை (D) ஏவல் விடை
(D) ஏவல் விடை
3. எவ்வகை வினா என்பதை எழுதுக.
தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது
(A) அறியா வினா (C) ஐய வினா
(B) அறி வினா (D) கொளல் வினா
(A) அறியா வினா
4. அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.
புரபோசல்
(A) ஆவணம் (C) கோப்பு
(B) கருத்துரு (D) ஒப்புச்சீட்டு
(B) கருத்துரு
5. இணையான தமிழ்ச்சொல் அறிக.
Member
of Legislative Assembly
(A) நாடாளுமன்ற உறுப்பினர் (C)
மக்களவை உறுப்பினர்
(B) பாராளுமன்ற உறுப்பினர் (D)
சட்டமன்ற உறுப்பினர்
(D) சட்டமன்ற உறுப்பினர்
6.
‘JOURNALISM' - என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ்ச் சொல் தருக.
(A) ஊடகம் (C) மொழியியல்
(B) பருவ இதழ் (D) இதழியல்
(D) இதழியல்
7. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' என்ற சொற்றொடரில் உவமை
விளக்கும் பொருள்?
(A) வெளிப்படைத் தன்மை (C) தற்செயல் நிகழ்வு
(B) எளிதில் மனதில் பதிதல் (D)
பயனற்ற செயல்
(A) வெளிப்படைத் தன்மை
8. 'காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல' என்ற
உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?
(A) ஒற்றுமையின்மை (C) தற்செயல் நிகழ்வு
(B) பயனற்ற செயல் (D) எதிர்பாரா நிகழ்வு
(C) தற்செயல் நிகழ்வு
9. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல - உவமையின் பொருளைத் தேர்க.
(A) தடையின்றி மிகுதியாக (C)
ஒற்றுமையின்மை
(B) எண்ணி செயல்படாமை (D) தற்செயல் நிகழ்வு
(C) ஒற்றுமையின்மை
10. அப்துல் நேற்று வருவித்தான் - இது எவ்வகை வாக்கியம்
(A) பிற வினை (C) செய் வினை
(B) தன் வினை (D) செயப்பாட்டு வினை
(A) பிற வினை
11. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
"சட்டி உடைந்து போயிற்று"
(A) தன் வினை (C) செய் வினை
(B) பிற வினை (D) செயப்பாட்டு வினை
(D) செயப்பாட்டு வினை
12. தொடர்வகை அறிந்து சரியான விடையை எழுதுக.
பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்து விட்டனவே!
(A) வினாத் தொடர் (C) நீ உணர்ச்சித் தொடர்
(B) கட்டளைத் தொடர் (D) செய்தித் தொடர்
(C) நீ உணர்ச்சித் தொடர்
13. மனித நேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. -
இவ்விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
(A) மனித நேயத்துடன் வாழ்பவர்கள் யார்?
(B) மனித நேயத்துடன் வாழ்பவர்களால் பயன் என்ன?
(C) யாரால் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?
(D) இவ்வுலகம் இயங்க என்ன செய்ய வேண்டும்?
(C) யாரால் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது?
14. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க.
விடை: ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
(A) ஒரு தாற்றில் எவ்வளவு வாழைப்பழங்கள் உள்ளன?
(B) ஒரு தாற்றில் எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன?
(C) ஒரு தாற்றில் எத்தனை சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன?
(D) ஒரு தாற்றில் எவ்வாறு பழங்கள் உள்ளன?
(C) ஒரு தாற்றில் எத்தனை சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன?
15. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
சரியான இணையைக் கண்டுபிடி
தொடுத்தல் - தொடுதல்
(A) பார்த்தல் - பகிர்தல்
(B) தேடுதல் - கிடைத்தல்
(C) அணிதல் - தீண்டுதல்
(D) கிடைத்தல் - படைத்தல்
(C) அணிதல் - தீண்டுதல்
16. சரியான தொடர்களைத் தேர்ந்தெடு.
- மறைந்து, மறைத்து
(I) பசி கண்ணை மறைத்தது
(II) உணவு உண்டதால் பசி மறைந்தது
(III) பசி கண்ணை மறைந்தது
(IV) உணவு உண்டதால் பசி மறைத்தது
(A)
(I) மற்றும் (IV) சரியானவை
(B)
(II) மற்றும் (III) சரியானவை
(C)
(I) மற்றும் (II) சரியானவை
(D)
(III) மற்றும் (IV) சரியானவை
(C) (I) மற்றும் (II) சரியானவை
17. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்க.
(A) இயற்கையின் அழகிய நாட்டியங்கள் அசைவுகள் அனைத்தும்
(B) இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியங்கள்
(C) அழகிய நாட்டியங்கள் அனைத்தும் இயற்கையின் அசைவுகள்
(D) அழகிய அசைவுகள் அனைத்தும் இயற்கையின் நாட்டியங்கள்
(B) இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியங்கள்
18. சொற்கள் ஒழுங்குபட அமைந்த சரியான தொடரைக் தேர்க.
(A) அலைபேசியைச் சாலையைக் கடப்பதே நல்லது அணைத்து விட்டு
(B) சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள பயன்படுத்துங்கள் நடைமேடையை
(C) விதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சாலையைக் கடக்கவும்
(D) ஓட்டுநர் உரிமம் இன்றிச் சட்டப்படி குற்றம் வண்டிகளை ஓட்டுவது
(C) விதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சாலையைக் கடக்கவும்
19. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
இரண்டாயிரம் தொன்மையுடையது ஆண்டுகாலத் ஏறு தழுவுதல்
(A) ஏறு தழுவுதல் தொன்மையுடையது ஆண்டுகாலத் இரண்டாயிரம்
(B) ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது
(C) இரண்டாயிரம் ஆண்டுகாலத் ஏறுதழுவுதல் தொன்மையுடையது
(D) இரண்டாயிரம் தொன்மையுடையது ஏறு தழுவுதல் ஆண்டுகாலத்
(B) ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது
20. பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை,
தவண்டை, பிடில், நாகசுரம்,
மகுடி
(A) உடுக்கை, தவண்டை, பிடில்,
நாகசுரம், மகுடி, உறுமி,
படகம், தவில், கணப்பறை,
பேரியாழ்
(B) உறுமி, உடுக்கை, தவண்டை,
நாகசுரம், மகுடி, பிடில்,
படகம், தவில், கணப்பறை,
பேரியாழ்
(C) உடுக்கை, உறுமி, கணப்பறை,
தவண்டை, தவில், நாகசுரம்,
படகம், பிடில், பேரியாழ்,
மகுடி
(D) உறுமி, உடுக்கை, தவில்,
நாகசுரம், கணப்பறை, படகம்,
பிடில், பேரியாழ், மகுடி,
தவண்டை
(C) உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி