TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 17
21. அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
வனப்பு, அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி
(A) அழகு, வனப்பு, மகிழ்ச்சி,
பூரிப்பு
(B) அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி,
வனப்பு
(C) அழகு, மகிழ்ச்சி, பூரிப்பு,
வனப்பு
(D) பூரிப்பு, அழகு, மகிழ்ச்சி,
வனப்பு
(B) அழகு, பூரிப்பு, மகிழ்ச்சி, வனப்பு
22. 'படி' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் கண்டறிக.
(A) படித்த (C) படிக்கின்ற
(B) படித்து (D) படித்தான்
(D) படித்தான்
23. வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
கேள் ………………
(A) கேட்டு (C) கேட்டான்
(B) கேட்ட (D) கேட்டவர்
(D) கேட்டவர்
24. சுடு - என்ற சொல்லின் தொழிற்பெயரைக் கண்டறிக.
(A) சுட்டான் (C) சுடுதல்
(B) சுட்ட (D) சுட்டு
(C) சுடுதல்
25.
"மயங்கிய" - வேர்ச்சொல்லைத் தருக.
(A) மய (C) மயங்கு
(B) மயக்கி (D) மயக்கு
(C) மயங்கு
26. சரியான வேர்ச்சொல் - பொருந்தாத இணையைத் தேர்க.
(A) வேறல் - வெல்
(B) கோடல் - கோடு
(C) கோறல் - கொல்
(D) சேறல் - செல்
(B) கோடல் - கோடு
27. 'உண்கிறேன்' - இதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) உண்டு (C) ஊண்
(B) உண் (D) உண்ணல்
(B) உண்
28.
"என்னுடன் ஊருக்கு வருவாயா?” என்ற
வினாவிற்கு 'வராமல் இருப்பேனா?' என்று
கூறுவது, ……………………. விடை ஆகும்.
(A) வினா எதிர் வினாதல் விடை (B)
உறுவது கூறல் விடை
(C) இனமொழி விடை (D) உற்றது உரைத்தல் விடை
(A) வினா எதிர் வினாதல் விடை
29. குணக்கு, குடக்கு எனும் பெயர்கள் குறிப்பது
(A) மலை (C) திசை
(B) கடல் (D) ஆறு
(C) திசை
30. ஏரி, ஏறி - ஒலி வேறுபாடு அறிந்து சரியாக அமைந்துள்ள
விடையைத் தேர்க.
(A) மரத்தில் ஏரினான். ஏறியில் குளித்தான்.
(B) மரத்தில் ஏறினான். ஏரியில் குளித்தான்.
(C) ஏறியில் மீன் பிடித்தான். மலையில் ஏரினான்
(D) ஏணியில் ஏரினாள். ஏறியில் மீன் பிடித்தாள்
(B) மரத்தில் ஏறினான். ஏரியில் குளித்தான்.
31. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
சூல் - சூழ் - சூள்
சூல் சூழ் சூள்
(A) கருப்பம் - முட்டை - ஆணை
(B) சுற்றியிரு – கருப்பம் - சபதம்
(C) கருப்பம் - ஆராய்ச்சி - சபதம்
(D) ஆணை - ஆராய்ச்சி - கருப்பம்
(C) கருப்பம் - ஆராய்ச்சி - சபதம்
32. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல். சரியானத் தொடரைத் தேர்க.
(A) கார் பருவத்தில் நன்றாக விளைந்தும், தானியங்களின்
விலை குறையாமல் இருந்தது
(B) கார் பறுவத்தில் நண்றாக விளைந்தும், தாணியங்களின்
விலை குறையாமல் இருந்தது
(C) கார் பருவத்தில் நன்றாக விளைந்தும், தானியங்களின்
விலை குரையாமல் இருந்தது
(D) காற் பருவத்தில் நன்றாக விலைந்தும், தாணியங்களின்
விலை குரையாமல் இறுந்தது
(A) கார் பருவத்தில் நன்றாக விளைந்தும், தானியங்களின் விலை குறையாமல் இருந்தது
33.
'Elocution' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் தருக.
(A) எழுத்தாற்றல் (C) கதைப்பாடல்
(B) பேச்சாற்றல் (D) தியாகம்
(B) பேச்சாற்றல்
34. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லறிதல்.
LEVEL
CROSSING
(A) கூட்டுச் சாலையை கடக்குமிடம்
(B) வளைவுப் பாதையைக் கடக்குமிடம்
(C) இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
(D) பள்ளிப் பகுதியைக் கடக்குமிடம்
(C) இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
35. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
REVOLUTION
(A) வறட்சி (C) காட்சி
(B) புரட்சி (D) மாட்சி
(B) புரட்சி
36. வட்டார வழக்குச் சொல்லில் 'பதனம்' என்பதன் பொருளை சுட்டுக.
(A) பாத்தி (C) தொலைவில்
(B) சலிப்பு (D) கவனமாக
(D) கவனமாக
37. மரபுப் பிழைகள் நீக்குக. - மரபுப் பிழையுள்ள தொடரைத் தெரிவு செய்க.
பறவைகளின் ஒலி மரபு.
(A) காகம் கரையும் (C) ஆந்தை அலறும்
(B) கோழி கூவும் (D) மயில் அகவும்
(B) கோழி கூவும்
38. மரபுப் பிழை நீக்கி சரியான சொல்லால் எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாக கூரை ………….
(A) போட்டனர் (C) வேய்ந்தனர்
(B) மேய்ந்தனர் (D) முடைந்தனர்
(C) வேய்ந்தனர்
39. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
பாரதியார்
(A) பாரதிதாசன் (C) கண்ணதாசன்
(B) வாணிதாசன் (D) ஒளவையார்
(D) ஒளவையார்
40 மகரக் குறுக்கம் அல்லாதது எது?
(A) போன்ம் (C) வரும் வளவன்
(B) கொண்ம் (D) நறும் மலர்
(D) நறும் மலர்