TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 18
41. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
பாடுதல், பாடியவள், கெடுதல், படித்தல்
(A) பாடுதல் (C) கெடுதல்
(B) பாடியவள் (D) படித்தல்
(B) பாடியவள்
42. 'எளிது' என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ……………….
(A) அரிது (C) பெரிது
(B) சிறிது (D) வறிது
(A) அரிது
43. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
ஐம்பெருங்காப்பியம்
(A) ஐந்திணை (C) ஐஞ்சிறுகாப்பியம்
(B) ஐங்குறுகாப்பியம் (D) ஐந்நெடுங்காப்பியம்
(C) ஐஞ்சிறுகாப்பியம்
44. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்
நகுதல் - எதிர்ச்சொல் தருக.
(A) சிரித்தல் (C) மலர்தல்
(B) உவத்தல் (D) அழுதல்
(D) அழுதல்
45. 'இடர் ஆழி நீங்குகவே' - இத்தொடரில் இடர் என்பதன்
எதிர்ச்சொல்லை எழுதுக.
(A) இன்பம் (C) துயரம்
(B) துன்பம் (D) தூய்மை
(A) இன்பம்
46. தானொரு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) தா + ஒரு (C) தான்+ஒரு
(B) தான்+னொரு (D) தானே+ஒரு
(C) தான்+ஒரு
47. சேர்த்து எழுதுக. இனிமை + உயிர்
(A) இன்உயிர் (C) இன்னுயிர்
(B) இனிய உயிர் (D) இனிமை உயிர்
(C) இன்னுயிர்
48. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
(A) எந்+தமிழ்+நா (C) எம்+தமிழ்+நா
(B) எந்த+தமிழ்+நா (D) எந்தம்+தமிழ்+நா
(C) எம்+தமிழ்+நா
49. இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
(A) சர்ஐசக் நியூட்டன்
(B) சர்.சி.வி. இராமன்
(C) தாமஸ் ஆல்வா எடிசன்
(D) ஐன்ஸ்டீன்
(B) சர்.சி.வி. இராமன்
50. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்த கேள்வி எது?
(A) கடல் நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது?
(B) கடல் நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
(C) கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
(D) கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது
(C) கடல் நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
51. தேசிய அறிவியல் நாள் என்றைக்குக் கொண்டாடப்படுகிறது?
(A) பிப்ரவரி 28 (C) ஜூன் 30
(B) ஜனவரி 26 (D) டிசம்பர் 10
(A) பிப்ரவரி 28
52. சர்.சி.வி இராமன் தன் ஆய்வின் முடிவை எந்த ஆண்டு வெளியிட்டார்?
(A) 1920 (C) 1982
(B)
1928 (D) 1298
(B) 1928
53. இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
(A) மேரி கியூரி (C) இராமானுஜர்
(B) இரவீந்திரநாத் தாகூர் (D) சர்.சி.வி. இராமன்
(D) சர்.சி.வி. இராமன்
54. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) மாணவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
(B) மாணவர் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
(C) மாணவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
(D) மாணவர்கள் கால்பந்து விளையாடுகிறான்.
(A) மாணவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
55. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றது
(B) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவு நெஞ்சில் எழுகின்றன
(C) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றன
(D) எங்கள் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகிறது .
(C) என் பள்ளிப்பருவத்தின் பசுமை மாறா நினைவுகள் நெஞ்சில் எழுகின்றன
56. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.
(A) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகள் உள்ளது
(B) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகள் உள்ளன
(C) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலை உள்ளன (D) அன்னம் விளையாடும் அகலமான துறை கொண்ட நீர்நிலைகள் உள்ளது
(B) அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகள் உள்ளன
(a) நாளிகேரம் 1. அரசமரம்
(b) கோளி 2. தென்னை
(c) சாலம் 3. பச்சிலை மரம்
(d) தமாலம் 4. ஆச்சா மரம்
(a)
(b) (c) (d)
(A) 2
4 3 1
(B) 1
3 4 2
(C) 2
1 4 3
(D) 4
2 3 1
(C) 2 1 4 3
58. சொல்லும் - பொருளும்
தவறான இணையைக் கண்டறிக.
(A) கிளை உறவினர் (C)
போற்றார் - பகைவர்
(B) பேதையார் – அறிவற்றவர் (D)
அலந்தவர் - கொடையாளர்
(D) அலந்தவர் - கொடையாளர்
59. சொல்-பொருள்-பொருத்துக.
(a) மைவனம் 1. தேன்
(b) முருகு 2. மலைநெல்
(c) மதியம் 3. பவளம்
(d) துவரை 4. நிலவு
(a)
(b) (c) (d)
(A) 2
1 4 3
(B) 3
1 4 2
(C) 4
2 3 1
(D) 1
3 2 4
(A) 2 1 4 3
60. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்
(A) ஒரு இரவும் அஃது பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(C) அந்த இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(D) இரவும் மற்றும் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்