TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 19

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 19

61. சரியான தொடரைத் தேர்ந்தெடு

சாலவும் நன்று. எவ்வகைத் தொடர்?

(A) விளித்தொடர்                  (C) அடுக்குத்தொடர்

(B) இடைச்சொல் தொடர்  (D) உரிச்சொல் தொடர்

(D) உரிச்சொல் தொடர்

 

62. சரியான தொடரைக் கண்டுபிடி

(A) பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது

(B) முருகன் சோறு தின்றான்

(C) குயவர் பானை செய்தார்

(D) அணில் பழம் சாப்பிட்டது.

(A) பள்ளிக்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது

 

63. சரியான தொடரைத் தேர்க.

(A) மையோ மறிகடலோ மழைமுகிலோ மரகதமோ

(B) மையோ மழைமுகிலோ மரகதமோ மறிகடலோ

(C) மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

(D) மையோ மழைமுகிலோ மறிகடலோ மரகதமோ

(C) மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ

 

64. பழம் என்பதன் கூட்டப் பெயர்

(A) குவியல்

(B) குலை

(D) கட்டு

(C) மந்தை

(B) குலை

 

65. பின்வரும் சொல்லின் சரியான கூட்டுப் பெயரை தெரிக.

கல்

(A) கல் கூட்டம்    (C) கற்குவியல்

(B) கல் மந்தை     (D) கல் கட்டு

(C) கற்குவியல்

 

66. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்

இஸ்மத் சன்னாசி" என்ற சொல் எந்த மொழிக்கு உரியது?

(A) கிரேக்கம்          (C) அரபு

(B) சமஸ்கிருதம்   (D) பாரசீகம்

(D) பாரசீகம்

 

67. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

கம்பர் எழுதிய நூல்களுள் ஒன்று

(A) நீதிநெறி விளக்கம்

(B) மதுரை கலம்பகம்

(C) கந்தர் கலிவெண்பா

(D) சடகோபர் அந்தாதி

(D) சடகோபர் அந்தாதி

 

68. ‘குண்டம்' - எதைக் குறிக்கிறது?

(A) குளிக்கும் நீர் நிலை

(B) இடத்தின் பெயர்

(D) கமலைக் கிணறு

(C) உவர் நீர் நிலை

(A) குளிக்கும் நீர் நிலை

 

69. பொருந்தாத இணையைத் தேர்க.

(A) மல்லெடுத்த - வலிமையற்ற

(B) சமர் - போர்

(C) எக்களிப்பு பெருமகிழ்ச்சி

(D) நல்கும் - தரும்

(A) மல்லெடுத்த - வலிமையற்ற

 

70. கலைச்சொல் அறிதல்

RECIPROCITY

(A) வறுமை        (C) நற்பண்பு

(B) வளமை        (D) ஒப்புரவு நெறி

(D) ஒப்புரவு நெறி

 

71. கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையை தெரிவு செய்க.

Equestrain

(A) யானையேற்றம் (C) குதிரையேற்றம்

(B) கப்பல் பயணம்  (D) இரயில் பயணம்

(C) குதிரையேற்றம்

 

72. கூற்று, காரணம் - சரியா? தவறா?

கூற்று: ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடையளித்தல் சதாவதானம் எனப்படும்.

காரணம்: சதம் என்றால் நூறு என்று பொருள்.

(A) கூற்று: தவறு, காரணம்: தவறு

(B) கூற்று: தவறு, காரணம்: சரி

(C) கூற்று: சரி, காரணம்: சரி

(D) கூற்று: சரி, காரணம்: தவறு

(C) கூற்று: சரி, காரணம்: சரி

 

73. கூற்று: கட்டுரையைப் படித்தான் - வேற்றுமைத் தொடர்

காரணம்: '' என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை

உணர்த்துகிறது

(A) கூற்றும், காரணமும் தவறு  (C) கூற்று தவறு, காரணம் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு   (D) கூற்றும், காரணமும் சரி

(D) கூற்றும், காரணமும் சரி

 

74. கூற்று, காரணம் சரியா என ஆய்க.

கூற்று: இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் மறுத்தார்.

காரணம்: ஸ்டீபன் ஹாக்கிங் இப்பேரண்டம் பெரு வெடிப்பினால் உருவானதே என்பதை கணிதவியல் அடிப்படையில் விளக்கினார்.

(A) கூற்று, காரணம் இரண்டும் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு

(C) கூற்று தவறு, காரணம் சரி

(D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

(A) கூற்று, காரணம் இரண்டும் சரி

 

75. இருபொருள் தருக.

ஓடு

(A) ஓடுதல், மேற்கூரை   (C) நிலவு, மாதம்

(B) நதி, எண்                         (D) புன்னகை, ஆபரணம்

(A) ஓடுதல், மேற்கூரை

 

76. இருபொருள் தருக.

நகை

(A) பெருமை, உவகை    (C) சிரிப்பு, அணிகலன்

(B) அழகு, விருப்பம்        (D) ஆசை, மகிழ்ச்சி

(C) சிரிப்பு, அணிகலன்

 

77. இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு.

வண்மை

(A) ஈகை, வலிமை

(B) வலிமை, கட்டளை

(C) வழங்குதல், கட்டளை

(D) கயிறு, நிலம்

(A) ஈகை, வலிமை

 

78. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (மழை)

(A) மரம் வளர்ப்போம்     - பெறுவோம்

(B) உரம் வளர்ப்போம்    - பெறுவோம்

(C) வீடு வளர்ப்போம்     - பெறுவோம்

(D) மடம் வளர்ப்போம்    - பெறுவோம்

(A) மரம் வளர்ப்போம் - பெறுவோம்

 

79. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை சரியான தொடரோடு சேர்க்க

(ஆசிய ஜோதி)

(A) புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்

(B) நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் நூல்

(C) பெரியாரின் வரலாற்றைக் கூறும் நூல்

(D) பாரதியாரின் வரலாற்றைக் கூறும் நூல்

(A) புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்

 

80. கீழ்க்காணும் தொடர்களை இணைக்கும் சரியான இணைப்புச் சொல்லைத் தேர்க.

1. தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்

2. உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமாகும்.

(A) ஆனால்            (C) அதேபோல

(B) ஆகையால்     (D) ஏனெனில்

(D) ஏனெனில்

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top