TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 20
81. சரியான இணைப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
நிலம், நீர், காற்று ஆகியவற்றை
மாசுபடுத்தி வருகிறோம். இயற்கைச் …………. சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது.
(A) ஆனால்
(B) ஏனெனில்
(C) அதுபோல
(D) அதனால்
(D) அதனால்
82. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
திருவள்ளுவர் திருக்குறளை ……………. இயற்றினார்?
(A) எதை? (B) எது?
(C) எவ்வாறு? (D) யார்?
(C) எவ்வாறு?
83. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் ……………….?
(A) எது? (B) யாது?
(C) என்ன? (D) யாவை?
(D) யாவை?
84. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
நெல்லையப்பர் கோவில் …………. உள்ளது?
(A) என்ன? (C) எது?
(B) எங்கு? (D) எப்பொழுது?
(B) எங்கு?
85. பொருத்தமான காலத்தை இட்டு நிரப்புக.
முதலமைச்சர் நேற்று கோவை …………..
(A) வந்தார் (C) வருவார்
(B) வருகிறார் (D) வருகின்றார்
(A) வந்தார்
86. பொருத்தமான காலம் அமைத்தல்.
சரியான தொடரைத் தேர்ந்தெடு
(A) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்
(இறந்த காலம்)
(B) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிடுவார்
(நிகழ்காலம்)
(C) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிடுகின்றார்
(எதிர்காலம்)
(D) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிடுகிறார்
(எதிர்காலம்)
(A) மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார் (இறந்த காலம்)
87. தலைமையாசிரியர் தேசியக் கொடியை ஏற்றினார்.
காலத்தைக் கண்டுபிடி.
(A) எதிர்காலம் (C) வருங்காலம்
(B) நிகழ்காலம் (D) இறந்தகாலம்
(D) இறந்தகாலம்
88. பின்வரும் சொற்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தெரிவு செய்க.
நீதி, கோல், விண், நூல், கண், மீன், எழுது
(A) நீதிநூல், விண்மீன், எழுதுகோல்
(B) கண்கோல், நீதிகோல், எழுதுகோல்
(C) விண்மீன், கண்மீன், கோல்மீன்
(D) நீதிநூல், எழுதுநூல், கண்மீன்
(A) நீதிநூல், விண்மீன், எழுதுகோல்
89. சொற்களை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்குக
குருவி
(A) இலை (C) மரம்
(B) கூடு (D) கனி
(B) கூடு
90. கீழ்க்கண்டவற்றுள் எழுத்து வழக்கு சொல்லை தேர்ந்தெடு
(A) காகம் கத்தும் (C) காகம் அழும்
(B) காகம் கரையும் (D) காகம் பேசும
(B) காகம் கரையும்
91. பேச்சு வழக்கு, எழுத்து வழக்குச் சொற்களைப்
பொருத்துக.
(a) வௌச்சல் 1. விலை
(b) புடிவாதம் 2. விளைச்சல்
(c) வெல 3. அமாவாசை
(d) அம்மாசி 4. பிடிவாதம்
(a)
(b) (c) (d)
(A) 2
4 3 1
(B) 2
4 1 3
(C) 3
1 4 2
(D) 4
1 3 2
(B) 2 4 1 3
92. பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக.
(A) அவன் இப்ப ஒசரமா வளந்துட்டான்
(B) அவன் இப்பொழுது உயரமா வளந்துட்டான்
(C) அவன் இப்பொழுது உயரமாக வளந்துட்டான்
(D) அவன் இப்பொழுது உயரமாக வளர்ந்துவிட்டான்
(C) அவன் இப்பொழுது உயரமாக வளந்துட்டான்
93. சொற்களின் கூட்டுப் பெயர்களை எழுதுக:
சோளம்
(A) தோப்பு (C) கொல்லை
(B) தோட்டம் (D) வயல்
(C) கொல்லை
94. நிறுத்தற்குறி அறிக.
(எது சரியானது)
(A) முத்தமிழ், "இயல் இசை நாடகம்”.
(B)
"முத்தமிழ்” - இயல், இசை, நாடகம்'.
(C) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
(D) முத்தமிழ்! இயல் இசை நாடகம்.
(C) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.
95. கீழ்கண்டவற்றுள் எது மருஉப் பெயர்?
(A) மதுரை (C) மயிலாப்பூர்
(B) தஞ்சாவூர் (D) கோவை
(D) கோவை
96. ஊர்ப்பெயர்களின் மருஉவை எழுதுக
திருச்சிராப்பள்ளி
(A) புதுகை (C) மயிலை
(B) திருச்சி (D) தஞ்சை
(B) திருச்சி
97. தமிழக முதல்வர் மயிலைக்குச் சுற்றுப் பயணம் சென்றார்.
– இத்தொடரில் ‘மயிலை' என்று குறிப்பிடப்படுவது
(A) மயிலாப்பூர் (C) மயிலாடுதுறை
(B) மயில் (D) இமயமலை
(A) மயிலாப்பூர்
98. மெய்நிகர் உதவியாளர் நாம் கேட்பதை ப்ரௌசரில் தேடும்.
இத்தொடரில் ‘ப்ரௌசர்' என்ற சொல்லுக்கு இணையானத்
தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
(A) சுட்டி (C) உலாவி
(B) இணையம் (D) வலையொளி
(C) உலாவி
99. நாக்கிற்கு நான்கு ஆதார ருசிகள் தாம் தெரியும்.
– இத்தொடரில் ‘ருசி' என்ற சொல்லுக்கு இணையான
தமிழ்ச்சொல்
(A) சுவை (C) பதம்
(B) இனிமை (D) உணர்வு
(A) சுவை
100. டெரகோட்டா - இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
(A) ஓவியக்கலை (C) சுடுமண் சிற்பக்கலை
(B) சிற்பக்கலை (D) செப்புப் படிமக் கலை
(C) சுடுமண் சிற்பக்கலை