TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 21
1. சரியான இணையைக் கண்டறிக:
(A) கதி - துணை
(B) பேறு - மிகுதி
(C) தரம் - செல்வம்
(D) நனி - தகுதி
(A) கதி - துணை
2. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
திராவிட மொழிகளில் பொருந்தாததை எடுத்து எழுதுக.
(A) தமிழ் (C) ஹிந்தி
(B) மலையாளம் (D) தெலுங்கு
(C) ஹிந்தி
3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(A) போது (C) செம்மல்
(B) கம்மல் (D) அரும்பு
(B) கம்மல்
4. பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
(A) அவர்கள் இருவர்க்கும் இடையே விவாதம் நடந்தது
(B) அவர்கள் இருவர்க்கும் இடையே உரையாடல் நடந்தது
(C) அவர்கள் இருவர்க்கும் இடையே கான்வர்சேசன் நடந்தது
(D) அவர்கள் இருவர்க்கும் டிஸ்கசன் நடந்தது
(B) அவர்கள் இருவர்க்கும் இடையே உரையாடல் நடந்தது
5. மரபுப் பிழைகள் ஒலி மரபு:
கூகை
(A) குழறும் (C) கூவும்
(B) அகவும் (D) அலறும்
(A) குழறும்
6. குட்டி, பிள்ளை, மடலி, வடலி ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) தாவரங்களின் இளநிலை (C) விலங்குகளின் இளநிலை
(B) ஆண்களின் இளநிலை (D) பெண்களின் இளநிலை
(A) தாவரங்களின் இளநிலை
7. இலஞ்சி, கூவல், புனற்குளம்,
குண்டம், ஊருணி ஆகிய சொற்கள் உணர்த்தும்
பொருளைக் கண்டறிக.
(A) மலைகள் (C) ஊர்கள்
(B) நீர்நிலைகள் (D) விலங்குகள்
(B) நீர்நிலைகள்
8. தில்லம், அழுவம், பதுக்கை,
கணையம், அடவி எனும் சொற்கள் எதனைக் குறிக்கும்
வேறு பெயர்கள்?
(A) காடு (C) கடல்
(B) மலை (D) ஆறு
(A) காடு
9. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(A) மட்டைக்கூடை, தட்டுக்கூடை, பூக்கூடை,
பழக்கூடை
(B) பூக்கூடை, பழக்கூடை, மட்டைக்கூடை,
தட்டுக்கூடை
(C) பழக்கூடை, தட்டுக்கூடை, மட்டைக்கூடை,
பூக்கூடை
(D) தட்டுக்கூடை, பழக்கூடை, பூக்கூடை,
மட்டைக்கூடை
(D) தட்டுக்கூடை, பழக்கூடை, பூக்கூடை, மட்டைக்கூடை
10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களைத் தெரிவு செய்க மூன்று கோல்டு
பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு.
(A) மூன்று கோல்டு பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு
(B) மூன்று தங்க பிஸ்கட்டுகளில் ஒன்று எடை குறைவு
(C) மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று வெயிட் குறைவு
(D) மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று எடை குறைவு
(D) மூன்று தங்கக் கட்டிகளில் ஒன்று எடை குறைவு
11. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்:
அரி - அறி
(A) திருமால் - சிவன்
(B) சிவன் - திருமால்
(C) தெரிந்து - அறிந்து
(D) திருமால் - தெரிந்து கொள்
(D) திருமால் - தெரிந்து கொள்
12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க:
'கூரை - கூறை'
(A) கூரிய முனை - வீட்டின் கூரை
(B) கூட்டுப் பண்ணை - வீட்டின் கூரை
(C) வீட்டின் கூரை - புடவை
(D) புடவை - கூர்மையான ஆயுதம்
(C) வீட்டின் கூரை - புடவை
13. சரியான வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
(A) போர்க் களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது
(B) போர்க்கலத்தில் புன்பட்ட வீறர்களுக்கு களத்தில் நீர் தறப்பட்டது
(C) போர்க்களத்தில் புண்பட்ட வீறர்களுக்கு களத்திள் நீர் தரப்பட்டது
(D) போர்க்கலத்தில் புண்பட்ட வீறற்களுக்கு களத்தில் நீர் தரப்பட்டது
(A) போர்க் களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது
14. வேர்ச்சொல்லைக் கண்டறிக:
‘விரித்த’
(A) விரித்து (C) விர்
(B) விரி (D) வீர்
(B) விரி
15. வேர்ச்சொல்லைக் கண்டறிக - ‘உரைத்தல்’
(A) உரைக்க (C) உரைத்த
(B) உரைத்து (D) உரை
(D) உரை
16. கண்டான் - வேர்ச்சொல்லைக் கண்டறிக
(A) கண் (C) கண்ட
(B) காண் (D) கண்டு
(B) காண்
17. வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல்:
தேடுகிறான்
(A) தேடிய (C) தேடினான்
(B) தேடு (D) தேடி
(B) தேடு
18. ‘அஞ்சி' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்
கண்டறிக
(A) அஞ்சினார் (C) பயந்தனர்
(B) அஞ்சினர் (D) அஞ்சா
(B) அஞ்சினர்
19. 'வா' எனும் வேர்ச்சொல் கொண்டமையும் வினையாலணையும்
பெயரைக் கண்டறிக.
(A) வந்தவர் (C) வந்து
(B) வந்தான் (D) வந்த
(A) வந்தவர்
20. 'வாழ்' என்பதன் தொழிற்பெயரினைக் கண்டறிக
(A) வாழ்ந்தேன்
(B) வாழ்க்கை
(C) வாழ்ந்தவர்
(D) வாழ்ந்த
(B) வாழ்க்கை