TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 22
21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:
'Courage'
(A) துணிவு (C) நேர்மை
(B) தியாகம் (D) சமத்துவம்
(A) துணிவு
22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லில் சரியான தொடரைக் காண்க:
(A)
Paddy - நெற்பயிர்
(B)
Cultivation - அறுவடை
(C)
Harvest - களையெடுத்தல்
(D)
Agronomy - வேளாண்மை
(A) Paddy - நெற்பயிர்
23. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் கண்டறிக:
(A)
Epic Literature - செவ்விலக்கியம்
(B)
Folk Literature - வட்டார
இலக்கியம்
(C)
Devotional Literature - நவீன
இலக்கியம்
(D)
Ancient Literature - பண்டைய
இலக்கியம்
(D) Ancient Literature - பண்டைய இலக்கியம்
24. பிரித்தெழுதுக:
கலனல்லால்
(A) கலன் + லல்லால் (C) கலம் + அல்லால்
(B) கலன் + அல்லால் (D) கலன் + னல்லால்
(B) கலன் + அல்லால்
25. உவமைகளால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்:
விழலுக்கு இறைத்த நீர் போல
(A) ஒற்றுமையின்மை (C) தற்செயல் நிகழ்வு
(B) பயனற்ற செயல் (D) எதிர்பாரா நிகழ்வு
(B) பயனற்ற செயல்
26. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெழுதுதல்: திருவிழாவைக்காண மடை
திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.
(A) தடையின்றி மிகுதியாக (C)
பயனற்ற செயல்
(B) வெளிப்படைத்தன்மை (D) எதிர்பாரா நிகழ்வு
(A) தடையின்றி மிகுதியாக
27. விடை வகைகள்:
"கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்
(A) நேர்விடை (C) ஏவல் விடை
(B) இனமொழி விடை (D) சுட்டு விடை
(A) நேர்விடை
28. விடை வகைகள்:
‘உனக்கு ஆடத் தெரியுமா?' என்ற வினாவிற்கு ‘எனக்குப்
பாடத் தெரியும்' என உரைப்பது
(A) ஏவல் விடை (C) இனமொழி விடை
(B) உறுவது கூறல் விடை (D) மறை விடை
(C) இனமொழி விடை
29.
"நீ நடனமாடவில்லையா?” என்ற வினாவிற்குக்
‘கால் வலிக்கும்' என்று உறுவதை
உரைப்பது எவ்வகை விடை?
(A) உற்றது உரைத்தல் விடை (C) நேர் விடை
(B) இனமொழி விடை (D) உறுவது கூறல் விடை
(D) உறுவது கூறல் விடை
30. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க:
(A) அஃது அல்லவை (C) அஃது அல்ல
(B) அஃது அல்லன (D) அஃது அன்று
(D) அஃது அன்று
31. ஒருமை, பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க:
(A) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தது.
(B) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தான்.
(C) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.
(D) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்கின்றது.
(C) நான் நட்ட மரங்கள் அனைத்தும் வளர்ந்தன.
32. ஒருமை, பன்மை பிழை நீக்கி எழுதுக:
(A) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றது.
(B) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
(C) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகிறது.
(D) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வந்துகொண்டிருக்கிறது.
(B) கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
33. சரியான தொடரைத் தேர்ந்தெடு:
(A) துன்பத்தின் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(B) துன்பத்தை பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(C) துன்பத்தினால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(D) துன்பமே பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(B) துன்பத்தை பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
34. சொல் - பொருள் பொருத்துக:
(a) கெடிகலங்கி 1. கூட்டம்
(b) சேகரம் 2. மிகவருந்தி
(c) வாகு 3. மிகவும்
(d) மெத்த 4. சரியாக
(a)
(b) (c) (d)
(A) 3
1 2 1
(B) 2
1 4 3
(C) 4
1 3 2
(D) 2
4 1 3
(B) 2 1 4 3
35. பொருள் பொருத்துக:
சொல்
(a) பொலம் 1. காடு
(b) கடறு 2. குட்டி
(c) கோடு 3. அழகு
(d) குருளை 4. கொம்பு
(a)
(b) (c) (d)
(A) 1
4 2 3
(B) 3
1 4 2
(C) 2
3 1 4
(D) 4
2 3 1
(B) 3 1 4 2
36. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க:
'மூன்றினம்'
(A) துறை, தாழிசை, விருத்தம் (C) மா, பலா, வாழை
(B) அறம், பொருள், இன்பம் (D) ஆணவம், கன்மம், மாயை
(A) துறை, தாழிசை, விருத்தம்
37. ‘பாசவர்' என்பதன் பொருள் என்ன?
(A) ஓவியர் (C) வெற்றிலை விற்போர்
(B) எண்ணெய் விற்போர் (D) நெய்பவர்
(C) வெற்றிலை விற்போர்
38. குறில் நெடில் மாற்றம். பொருள் வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தெரிவு செய்':
மடு, மாடு
(A) சுனை, குழி
(B) விலங்கு, பொய்கை
(C) பொய்கை, செல்வம்
(D) அணை, விலங்கு
(C) பொய்கை, செல்வம்
39. கொடு, கோடு என்னும் சொற்களின் அடிப்படையில் தவறான
பொருள்தரும்
வாக்கியத்தினைக் கண்டறிக
(A) தரையில் கோடு (C)
தாமரைக்கு புத்தகம் கோடு
(B) சஞ்சனாவுக்கு பழம் கொடு (D)
பென்சிலைக் கொண்டு கோடிடு
(C) தாமரைக்கு புத்தகம் கோடு
40. 'மடி' எனும் சொல்லிற்கு இருபொருள் தரும் இணைகளில்
சரியான இணையைக்
கண்டறிக
(A) கூம்பல் - பசும்பல்
(B) சோம்பல் - மடித்தல்
(C) ஆம்பல் - புலம்பல்
(D) ஏசல் - வீசல்
(B) சோம்பல் - மடித்தல்