TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 23

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 23

41. 'இசை' என்பதன் இரு பொருள்களைக் கண்டறிக

(A) பாடல், புகழ்

(B) பாடல், பழி

(C) பழி, புகழ்

(D) தாளம், வசை

(A) பாடல், புகழ்

 

42. கீழ்க்காணும் சொல்லுக்கு இருபொருள் தருக

செப்புதல்

(A) பேசுதல், விளம்புதல்  (C) மொழி, உரைத்தல்

(B) இயம்பல், நடித்தல்      (D) கூறல், சிரித்தல்

(A) பேசுதல், விளம்புதல்

 

43. ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா? சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

(A) ஒருவன் தனியாகப் போனால் அது ஊர்வலமா?

(B) ஒருத்தன் தனியாகப் போனால் அது ஊர்வலமா?

(C) ஒருவன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்வலமா?

(D) ஒருத்தன் தனியாகப் போனால் அது ஊர்கோலமா?

(A) ஒருவன் தனியாகப் போனால் அது ஊர்வலமா?

 

44. ஒசரமா வளந்துட்டான் - என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

(A) உயரமாக வளர்ந்துவிட்டான் (C) நெட்டையாக வளர்ந்துவிட்டான்

(B) உயரமாகி விட்டான்                  (D) உசரமாகி விட்டான்

(A) உயரமாக வளர்ந்துவிட்டான்

 

45. கீழ்க்கண்ட தொடர்களில் சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

(A) இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு, நீயும் புரிஞ்சிக்கோ.

(B) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்து கொள்.

(C) இப்பொழுது எனக்குப் புரிந்தாயிற்று. நீயும் புரிஞ்சுக்கோ.

(D) இப்போது எனக்குப் புரிந்து விட்டது. நீயும் புரிந்து கொள்.

(B) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்து கொள்.

 

46. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

சிலப்பதிகாரம் கூறும் மூன்று உண்மைகள்

(A) எது?       (C) யாவை?

(B) யாது?    (D) என்ன?

(C) யாவை?

 

47. பொருத்தமான வினாச் சொல்லை தேர்ந்தெடு.

பாரதியார் படைத்த முப்பெருங்காப்பியங்கள் ………..?

(A) யாவை  (C) எது

(B) ஏன்          (D) என்ன

(A) யாவை

 

48. சரியான வினாச் சொல்லை தேர்ந்தெடு.

நால்வகைப் படைகள் ……………?

(A) யாவை?        (C) ஏன்?

(B) என்ன?           (D) எப்படி?

(A) யாவை?

 

49. சரியான நிறுத்தற்குறியிடப்பட்டத் தொடரைக் கண்டறிக.

(A) ‘சொல் கேட்கிறேன்' என்றான் கணியன்.

(B) 'சொல், கேட்கிறேன்' என்றான் கணியன்.

(C) "சொல் கேட்கிறேன்” என்றான் கணியன்.

(D) "சொல், கேட்கிறேன்” என்றான் கணியன்.

(D) "சொல், கேட்கிறேன்” என்றான் கணியன்.

 

50. 'முத்தமிழ் இயல் இசை நாடகம்' என்பதற்கு பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டத் தொடரைக் கண்டறிக.

(A) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.

(B) முத்தமிழ், இயல், இசை, நாடகம்.

(C) முத்தமிழ் - இயல், இசை, நாடகம்

(D) முத்தமிழ்: இயல் - இசை - நாடகம்.

(A) முத்தமிழ்: இயல், இசை, நாடகம்.

 

51. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிக.

பழக்கலவை நிறைந்த ஜாடியில்

தண்ணீரை நிறைத்தனர்

(A) நிறைத்த, நிறைந்த    (C) நிறைந்த, நிறைத்த

(B) நிரைத்த, நிரைந்த     (D) நிரைந்த, நிரைத்த

(C) நிறைந்த, நிறைத்த

 

52. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:

(A) நாளை வருவார் தலைவர் குடியரசுத்.

(B) குடியரசுத் தலைவர் நாளை வருவார்.

(C) குடியரசுத் நாளை வருவார் தலைவர்.

(D) தலைவர் குடியரசு வருவார் நாளை.

(B) குடியரசுத் தலைவர் நாளை வருவார்.

 

53. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் ஆக்குவோம் இல்லாமை கல்லாமையை

(A) கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்

(B) இல்லாமை ஆக்குவோம் கல்லாமையை

(C) கல்லாமையை ஆக்குவோம் இல்லாமை

(D) ஆக்குவோம் கல்லாமையை இல்லாமை

(A) கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்

 

54. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.

'கோவலன் கொலையுண்டான்'

(A) தன்வினை வாக்கியம்       (C) செயப்பாட்டுவினை வாக்கியம்

(B) எதிர்மறை வாக்கியம்        (D) செய்வினை வாக்கியம்

(C) செயப்பாட்டுவினை வாக்கியம்

 

55. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

(I) அவன் திருந்தினான்   - பிறவினைத் தொடர்

(II) பாட்டுப் பாடப்பட்டது - செய்வினைத் தொடர்

(III) பணம் காணாமல் போனது - செயப்பாட்டு வினைத் தொடர்

(IV) அப்துல் நேற்று வருவித்தான் - தன்வினைத் தொடர்

 

(A) (III)       (C) (I)

(B) (IV)       (D) (II)

(A) (III)

 

56. அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கத்வைத் திறந்தார்

(A) கலவைத் தொடர்     (C) தொடர் சொற்றொடர்

(B) தனித்தொடர்             (D) செயப்பாட்டுவினைத் தொடர்

(A) கலவைத் தொடர்

 

57. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.

தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:

(A) பந்து உருண்டது           (C) பந்து உருட்டினார்

(B) பந்து உருட்டப்பட்டது (D) பந்தால் உருட்டினார்

(A) பந்து உருண்டது

 

58. 'சிங்கம்' என்பதன் இளமைப் பெயர் எதுவெனக் கண்டறிக.

(A) குட்டி          (C) கன்று

(B) குருளை       (D) பறழ்

(B) குருளை

 

59. 'பால்' என்னும் சொல்லுக்கு பொருந்தி வரும் வினைமரபு எதுவெனக் கண்டறிக.

(A) குடித்தான்      (C) விழுங்கினான்

(B) பருகினான்     (D) சாப்பிட்டான்

(B) பருகினான்

 

60. பொருத்தமான இணைப்புச் சொல்லை தெரிவு செய்க.

முகில் பள்ளிக்குச் செல்லவில்லை…………….. அவனுக்கு உடல் நலமில்லை

(A) அதனால்       (C) ஆகவே

(B) இதனால்       (D) ஏனெனில்

(D) ஏனெனில்

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top