TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 24
61. சரியான இணைப்புச்சொல் எழுதுக.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது ……………….. காக்கையின் கூட்டில்
முட்டையிடும்.
(A) அதனால் (C) மேலும்
(B) ஏனெனில் (D) அதுபோல
(A) அதனால்
62. கலைச்சொல் அறிக:
Tropical
zone
(A) குமிழிக்கல் (C) பாசனத்தொழில் நுட்பம்
(B) வெப்பமண்டலம் (D) நீர்மண்டலம்
(B) வெப்பமண்டலம்
63. சரியான கலைச்சொல்லால் பொருத்துக.
(a)
Earthworm 1. உலகமயமாக்கல்
(b)
Materialism 2. கடவுச்சீட்டு
(c)
Passport 3. பொருள் முதல்
வாதம்
(d)
Globalisation 4. நாங்
கூழ்ப்புழு
(a)
(b) (c) (d)
(A) 3
4 1 2
(B) 4
3 2 1
(C) 2
4 3 1
(D) 1
3 2 4
(B) 4 3 2 1
64. கலைச்சொல் தேர்க:
Lexicon
(A) உருபன் (C) ஒப்பிலக்கணம்
(B) ஒலியன் (D) பேரகராதி
(D) பேரகராதி
65. சரியான கலைச்சொல்லைத் தேர்க:
Literacy
(A) பட்டம் (C) கல்வியறிவு
(B) நீதி (D) ஒழுக்கம்
(C) கல்வியறிவு
66. பிழைத் திருத்துக.
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க:
(A) ஒரு அழகிய சிற்றூர் (C)
ஓர் அழகிய சிற்றூர்
(B) ஒன்று அழகிய சிற்றூர் (D)
ஒருமை அழகிய சிற்றூர்
(C) ஓர் அழகிய சிற்றூர்
67. பிழை திருத்துதல்.
சரியான எண்ணடையைத் தேர்ந்தெடு
(A) ஒரு ஏரி (C) ஒன்னு ஏரி
(B) ஒன்று ஏரி (D) ஓர் ஏரி
(D) ஓர் ஏரி
68. கீழ்காணும் தொடர்களில் [ஒரு - ஓர்] சரியாக அமைந்த தொடர் எது?
(A) ஓர் மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
(B) ஒரு அழகிய மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருந்தன.
(C) ஓர் பசுமையான மண்தொட்டியில் பூக்கள் வாடியுள்ளன.
(D) ஒரு மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
(D) ஒரு மண்தொட்டியில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன.
69. தென் தமிழ் நாட்டில் மலைவளம் படைத்த பழம்பதி எது?
(A) திருக்கைலாயம் (C) திருத்தணி
(B) திருக்குற்றாலம் (D) திருநின்றவூர்
(B) திருக்குற்றாலம்
70. பத்தியில் இடம் பெற்றுள்ள மரங்களின் பெயர்களைக் கூறுக
(A) கோங்கு, வேங்கை (C)
வேம்பு, சந்தனம்
(B) மா, பலா (D)
தேக்கு, வாகை
(A) கோங்கு, வேங்கை
71. தமிழ்ப் பாட்டிசைக்கும் உயிரினம் எது?
(A) குயில் (C) வண்டு
(B) மயில் (D) கிளி
(C) வண்டு
72. அருவியினின்று சிதறும் நீர்த்திவலைகளுக்குக் கூறப்பட்ட உவமை யாது?
(A) நீராவி (C) வெள்ளாவி
(B) பாலாவி (D) மஞ்சாவி
(B) பாலாவி
73. பத்தியில் இடம்பெற்றுள்ள மலர்களின் பெயர்களைக் கூறுக
(A) சண்பகமும் ஜவ்வாதும் (C)
மல்லிகையும் ரோஜாவும்
(B) கமலமும் அல்லியும் (D)
குரவமும் முல்லையும்
(D) குரவமும் முல்லையும்
74. சேர்த்தெழுதுக:
தமிழ் + எங்கள்
(A) தமிழங்கள் (C) தமிழுங்கள்
(B) தமிழெங்கள் (D) தமிழ் எங்கள்
(B) தமிழெங்கள்
75. பிரித்து எழுதுக:
விளங்காய்
(A) விளம் + காய் (C) விளங் + காய்
(B) விள + காய் (D) விளங்ங் + காய்
(B) விள + காய்
76. சேர்த்து எழுதுக:
பனி + காற்று
(A) பனிகாற்று (C) பனிக்காற்று
(B) பனிக்காற்று (D) பனிங்காற்று
(B) பனிக்காற்று
77. சொற்களின் கூட்டுப் பெயர்கள் - சரியானதைத் தேர்ந்தெடு - கரும்பு
(A) கரும்புக் கொல்லை (C) கரும்புத் தோப்பு
(B) கரும்புத் தோட்டம் (D) கரும்புக் கூட்டம்
(B) கரும்புத் தோட்டம்
78. கூற்று - சரியா? தவறா?
கூற்று 1: கலிப்பா தூங்கல் ஓசை உடையது.
கூற்று 2: கலித்தொகை கலிப்பாவால் ஆனது.
(A) கூற்று 1 தவறு, 2 - மட்டும்
சரி (C) கூற்று
இரண்டும் சரி
(B) கூற்று இரண்டும் தவறு (D)
கூற்று 1 மட்டும் சரி, 2 - தவறு
(A) கூற்று 1 தவறு, 2 - மட்டும் சரி
79. கூற்று - சரியா? தவறா?
1. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி
2. காஞ்சி என்றால் நிலைத்திருத்தல் என்பது பொருள்
3. இதைப் பெருகுவள மதுரைக்காஞ்சி என்பர்
(A) கூற்று 1,2 தவறு 3 மட்டும் சரி (C) கூற்று 1,2,3 சரி
(B) கூற்று 1,3 சரி 2 மட்டும் தவறு (D) கூற்று 1,2 சரி 3 மட்டும் தவறு
(A) கூற்று 1,2 தவறு 3 மட்டும் சரி
80. கூற்று [A]: கத்தியை தீட்டாதே உன்றன் புத்தியைத்
தீட்டு. வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி ஆகும், என்பது
அண்ணாவின் பொன்மொழி.
காரணம் [R]: 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை
நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
(A) கூற்று தவறு காரணம் தவறு (C)
கூற்று தவறு காரணம் சரி
(B) கூற்று சரி காரணம் சரி (D)
கூற்று சரி காரணம் தவறு
(B) கூற்று சரி காரணம் சரி