TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 25

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 25

81. அடைப்புக்குள் உள்ள சொல்லை, ஔவையார் கூற்றுப்படி தகுந்த இடத்தில் சேர்க்க:

(இடம்)

(A) கற்றோர்க்கு சென்ற ………………….. எல்லாம் சிறப்பு

(B) உற்றோர்க்கு சென்ற ……………………எல்லாம் சிறப்பு

(C) மற்றோர்க்கு சென்ற …………………..எல்லாம் சிறப்பு

(D) ஏற்றோர்க்கு சென்ற ………………………எல்லாம் சிறப்பு

(A) கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு

 

82. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:

(ஓரெழுத்து)

(A) தமிழில் நாற்பது …………………………. ஒரு மொழிகள் உள்ளன

(B) தமிழில் நாற்பத்து இரண்டு ………………………ஒரு மொழிகள் உள்ளன

(C) தமிழில் நாற்பத்து மூன்று ……………….. ஒரு மொழிகள் உள்ளன

(D) தமிழில் நாற்பத்து ஒன்று …………………….. ஒரு மொழிகள் உள்ளன

(B) தமிழில் நாற்பத்து இரண்டு ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன

 

83. பொருத்தமான நிகழ்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:

உலகில் மூவாயிரம் மொழிகள்

(A) பேசப்படும்                    (C) பேசினர்

(B) பேசப்படுகின்றன      (D) பேசுவர்

(B) பேசப்படுகின்றன

 

84. பின்வருவனவற்றுள் நிகழ்கால இடைநிலைகள்

(A) த், ட், ற், இன்   (C) கிறு, கின்று, ஆநின்று

(B) ப், வ்                   (D) , அல், இல்

(C) கிறு, கின்று, ஆநின்று

 

85. இறந்த காலத்தைக் காட்டும் வாக்கியத்தைச் சுட்டுக

(A) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்யும்

(B) நாளை எங்கள் ஊரில் மழை பெய்தது

(C) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது

(D) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்கின்றது

(C) நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது

 

86. ஏற்றம் - என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக

(A) உயர்வு           (C) மாற்றம்

(B) ஏற்றுதல்       (D) இறக்க்ம்

(D) இறக்க்ம்

 

87. பரிதி – என்பதன் எதிர்ச்சொல் எழுதுக

(A) சந்திரன்        (C) சூரியன்

(B) கதிரவன்       (D) வெய்யோன்

(A) சந்திரன்

 

88. எதிர்ச்சொல் தருக:

இம்மை என்பதன் எதிர்ச்சொல்

(A) இருமை        (C) வறுமை

(B) மறுமை        (D) இல்லாமை

(B) மறுமை

 

89. சரியான இணையை தேர்ந்தெடுக்க:

(A) சைதாப்பேட்டை - சைதா

(B) நாகப்பட்டினம்  - நாகை

(C) மன்னார்குடி    - மயிலை

(D) திருநெல்வேலி - திருநை

(B) நாகப்பட்டினம் - நாகை

 

90 ‘நாகப்பட்டினம்' என்னும் ஊரின் மரூஉ எதுவெனக் கண்டறிக

(A) நாகப்பட்டி      (C) பட்டினம்

(B) நாகை               (D) நாவை

(B) நாகை

 

91. “புரோட்டோகால்” – கலைச்சொல் அறிக

(A) செயல்திட்டம்  (C) செயல்பாடுகள்

(B) நிகழ்ச்சிநிரல்   (D) மரபுத்தகவு

(D) மரபுத்தகவு

 

92. Subsidy – நேரான தமிழ்ச்சொல் தருக

(A) நிழுவைத் தொகை    (C) கூட்டுத் தொகை

(B) நல்கை                             (D) நல்ல தொகை

(B) நல்கை

 

93. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

பயவாக் களரனையர் கல்லாதவர்"

(A) கல்லாதவர் யார்?                               (C) களர்நிலம் என்றால் என்ன?

(B) கல்லாதவர் எதைப் போன்றவர்? (D) கல்லாதவரின் நிலை யாது?

(B) கல்லாதவர் எதைப் போன்றவர்?

 

94. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

"பெருஞ்சித்திரனார் 'பாவலரேறு' என அழைக்கப்படுகிறார்"

(A) பெருஞ்சித்திரனார் ஏன் பாவலரேறு என அழைக்கப்படுகிறார்?

(B) பாவலரேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(C) பெருஞ்சித்திரனார் பாவலரேறு என அழைக்கப்படுகிறாரா?

(D) பெருஞ்சித்திரனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

(D) பெருஞ்சித்திரனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 

95. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக: தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது

(A) வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை எது?

(B) வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை என்ன?

(C) தூங்கல் ஓசை எப்படி வஞ்சிப்பாவுக்கு உரியது?

(D) ஏன் வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை தூங்கல் ஓசை?

(A) வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை எது?

 

96. தவறான இணையைத் தேர்க:

I. உத்தியோகம்    - அலுவல்

II. காரியதரிசி      - தலைவர்

III. நிபுணர்             - வல்லுநர்

IV. அங்கத்தினர்   - உறுப்பினர்

(A) III        (C) IV

(B) II          (D) I

(B) II

 

97. பொருத்துக:

(a) கரன்சி நோட்   1. மின்னணு வணிகம்

(b) செக்                     2. வரைவோலை

(c) ஈ காமர்ஸ்         3. பணத்தாள்

(d) டிமாண்ட் டிராஃப்ட் 4. காசோலை

(a) (b) (c) (d)

(A) 3 2 1 4

(B) 3 4 2 1

(C) 3 4 1 2

(D) 2 4 3 1

(C) 3 4 1 2

 

98. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு

(A) டென்ஷன் - மனவருத்தம்

(B) டென்ஷன் - மனமாற்றம்

(C) டென்ஷன் - மனமகிழ்ச்சி

(D) டென்ஷன் - மன அழுத்தம்

(D) டென்ஷன் - மன அழுத்தம்

 

99. பிழையான வாக்கியத்தைக் கண்டறிக:

I. வெள்ளம் அடித்துவந்த மணல் குவிந்தது

II. கையில் காசு சேர்ந்தது

III. ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்தனர்

IV. பூவின் இதழ்கள் விரித்தன

 

(A) I           (C) III

(B) IV        (D) II

(B) IV

 

100. சேர்ந்து - சேர்த்து - பொருள் வேறுபாடறிந்து, தவறான வாக்கியத்தைச் சுட்டுக

(A) ஊருக்கு போய்ச் சேர்ந்தேன்

(B) அவன் பணம் சேர்த்தான்

(C) சங்கவை கல்லூரியில் சேர்ந்தாள்

(D) இராமுவைப் பள்ளியில் சேர்ந்தனர்

(D) இராமுவைப் பள்ளியில் சேர்ந்தனர்

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top