TNPSC Tamil Eligibility Test Previous Year Questions and Answers Part 4

Mr. A M
0

TNPSC தமிழ் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பகுதி 4

61. கண்ணுடையம்மன் பள்ளு நூல் எவ்வகையைச் சார்ந்தது?

(A) சிற்றிலக்கியம்        (C) காப்பியம்

(B) பேரிலக்கியம்          (D) பக்தி இலக்கியம்

(A) சிற்றிலக்கியம்

 

62. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க.

ஊண் - ஊன்

(A) மாமிசம் சாப்பிடு              (C) உணவு-புலால்

(B) உணவு ஊட்டச்சத்து         (D) புரதம் – உண்டி

(C) உணவு-புலால்

 

63. ஒரு-ஓர்-பயன்பாடு சரியாக அமைந்த தொடரைத் தேர்க

(A) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(B) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(C) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(D) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(C) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

 

64. பிழை திருத்துதல் (ஒரு, ஓர்)

சரியானத் தொடரைத் தேர்க.

(A) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்

(B) ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஓர் நாள்

(C) ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்

(D) ஓர் இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஓர் நாள்

(A) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்

 

65. சொல்லுக்குரிய பொருளைத் தேர்வு செய்.

(a) நேமி      1. தூவி

(b) சுவல்    2. மலை

(c) கோடு   3. தோள்

(d) தூஉய்  4. வலம்புரிச் சங்கு

 

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1

(B) 3 2 1 4

(C) 2 1 3 4

(D) 1 4 2 3

(A) 4 3 2 1

 

66. பொருத்துக.

சொல்      பொருள்

(a) தெளிவு      1. அகற்றுவதற்கு

(b) ஓர்தல்        2. நற்காட்சி

(c) பிணி          3. நல்லறிவு

(d) பேர்தற்கு 4. துன்பம்

 

(a) (b) (c) (d)

(A) 2 3 4 1

(B) 4 3 2 1

(C) 1 3 4 2

(D) 3 2 4 1

(A) 2 3 4 1

 

67. சொல்லைப் பொருளோடு பொருத்துக.

(a)            1. மலர்

(b) பா          2. வான்

(c) வீ             3. பசு

(d) மீ             4. பாடல்

 

(a) (b) (c)

(A) 4 3 2 1

(B) 1 4 3 2

(C) 3 4 1 2

(D) 2 3 4 1

(C) 3 4 1 2

 

68. சொல் - பொருள் பொருத்துக.

(a) செப்பல் ஓசை 1. வஞ்சிப்பா

(b) அகவல் ஓசை  2. கலிப்பா

(c) துள்ளல் ஓசை  3. வெண்பா

(d) தூங்கல் ஓசை 4. ஆசிரியப்பா

 

(a) (b) (c) (d)

(A) 3 4 2 1

(B) 1 2 3 4

(C) 3 2 1 4

(D) 1 3 2 4

(A) 3 4 2 1

 

69. ஒருமை பன்மை - பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.

(A) உலகில் ஒரு வகை செல்வங்கள் உள்ளன

(B) உலகில் ஒரு வகை செல்வங்கள் உள்ளது

(C) உலகில் பல வகையான செல்வங்கள் உள்ளன

(D) உலகில் பல வகை செல்வங்கள் உள்ளது

(C) உலகில் பல வகையான செல்வங்கள் உள்ளன

 

70. ஒருமை - பன்மை பிழையற்றத் தொடர் எது?

(A) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினார்

(B) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றியது

(C) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினான்

(D) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றின

(A) காமராசர் கல்விப்பணிகளை ஆற்றினார்

 

71. சரியான தொடரைத் தேர்ந்தெடு

எவ்வளவு பெரிய வினாத்தாள்

(A) உணர்ச்சித் தொடர்    (C) செய்தித் தொடர்

(B) வினாத் தொடர்             (D) பெயர்ப் பயனிலைத் தொடர்

(A) உணர்ச்சித் தொடர்

 

72. சரியான தொடரைத் தேர்ந்தெடு.

பூக்களைப் பறிக்காதீர் - இது எவ்வகைத் தொடர்?

(A) வினாத் தொடர்            (C) கட்டளைத் தொடர்

(B) உணர்ச்சித் தொடர்    (D) செய்தித் தொடர்

(C) கட்டளைத் தொடர்

 

73. கூட்டப் பெயரைக் குறிப்பிடு.

புல்

(A) கட்டு              (C) குவியல்

(B) தோகை        (D) கூட்டம்

(A) கட்டு

 

74. கூட்டப் பெயரைத் தெரிவு செய்க.

மாடு

(A) மாடுகள்            (C) மாட்டு மந்தை.

(B) மாட்டுப் பட்டி  (D) மாட்டுக் கொட்டகை

(C) மாட்டு மந்தை

 

75. சொற்களின் கூட்டப் பெயர்கள்

தென்னை என்பதன் கூட்டுப் பெயர் என்ன?

(A) தென்னந்தோட்டம்    (C) தென்னங்காடு

(B) தென்னந்தோப்பு         (D) தென்னஞ்சோலை

(B) தென்னந்தோப்பு  

 

76. 'ஞாயிறு' என்னும் சொல் குறிக்காத பொருள்

(A) பகலவன்          (C) சந்திரன்

(B) சூரியன்            (D) கதிரவன்

(C) சந்திரன்

 

77. பொருத்தமான பொருளை தெரிவு செய்தல்.

சிங்கத்தின் இளமைப் பெயர் ………..

(A) பறழ்              (C) குட்டி

(C) குருளை       (D) கன்று

(C) குருளை

 

78. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

காலை ஒளியினில் மலரிதழ் …………………..

சோலைப் பூவினில் வண்டினம் ………………

(A) அவிழும் – கவிழும்   (C) செல்லும் - செல்லாது

(B) தங்கும் – தங்காது     (D) கூவும் - கத்தும்

(A) அவிழும் – கவிழும்

 

79. சரியான கலைச்சொல் தேர்க:

Metaphor

(A) உவமை அணி                    (C) சிலேடை அணி

(B) தற்குறிப்பேற்ற அணி     (D) உருவக அணி

(D) உருவக அணி

 

80. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.

(கல்வி வளர்ச்சி நாள்)

(A) காமராசர் வளர்ந்த நாள் …………. ஆகக் கொண்டாடப்படுகிறது.

(B) காமராசர் பிறந்த நாள் ……………. ஆகக் கொண்டாடப்படுகிறது.

(C) காமராசர் ஆட்சி நாள் …………. ஆகக் கொண்டாடப்படுகிறது.

(D) காமராசர் மறைந்த நாள் …………. ஆகக் கொண்டாடப்படுகிறது.

 

(B) காமராசர் பிறந்த நாள் ……………. ஆகக் கொண்டாடப்படுகிறது.

 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top