அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - குப்தர்கள்
'கணக்காயர்' என்ற பெயர் எதனை குறிப்பிடுகிறது?
(A) புலவர்கள்
(B) வழக்குரைஞர்கள்
(C) வணிகர்கள்
(D) ஆசிரியர்கள்
ANSWER D
கீழ்க்காண்பவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?
(A) ஆயுர்வேதா - மருத்துவம்
(B) தனுர்வேதா - வானவியல்
(C) காந்தர்வவேதா - இசை
(D) சிலப்பவேதா - கட்டிடக்கலை
ANSWER B
பின்வருவனவற்றுள் விசாகதத்தரால் எழுதப்பட்ட இரண்டு நூல்கள் எவை?
1. காவிய தரிசனம்
II. முத்ர ராக்சசம்
III. குந்த மாலை
IV. தேவிசந்திர குப்தம்
(A) II மற்றும் IV (B) I மற்றும் II
(C) III மற்றும் IV (D) II மற்றும் III
ANSWER A
குப்தர்களை பற்றிய கூற்றுகளில் தவறான வாக்கியம் எது?
(A) நாணயங்களில் சந்திரகுப்தர் குமாரதேவி உருவங்கள் காணப்படுகிறது
(B) ஹரிசேனர் சந்திரகுப்தரின் முக்கிய அலுவர் ஆவார்
(C) கழுத்திர குப்தரின் கல்வெட்டு அலகாபாத் அசோகர் தூண் கல்வெட்டில் காணப்படுகின்றது.
(D) ஈரான் கல்வெட்டு சமுத்திரகுப்தரை பற்றி தெரிவிக்கின்றது
ANSWER B
சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய புத்த எழுத்தாளர்
(A) காளிதாசர்
(B) பாரவி
(C) அஸ்வகோசர்
(D) குமாரதாசர்
ANSWER C
யாருடைய ஆட்சிக் காலத்தில் குப்த பேரரசின் எல்லை அரபிக் கடல் வரை பரவியது?
(A) ஸ்ரீகுப்தர்
(B) சமுத்திர குப்தர்
(C) முதலாம் சந்திர குப்தா
(D) இரண்டாம் சந்திர குப்தர்
ANSWER D
முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்?
(A) முதலாம் சந்திர குப்தர்
(B) சமுத்திர குப்தர்
(C) இரண்டாம் சந்திர குப்தர்
(D) ஸ்ரீகுப்தர்
ANSWER C
புகழ் மிக்க புத்த சமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்த குப்த மன்னர் யார்?
(A) ஸ்ரீ குப்தர்
(B) கடோற்கஜம்
(C) முதலாம் சந்திர குப்தா
(D) சமுத்திர குப்தர்
ANSWER D
“பஞ்ச சித்தாந்திகா” என்ற ஐந்து வான இயல் அமைப்புக்களை தொகுத்தவர்
(A) பிரம்ம குப்தர்
(B) ஆரியபட்டர்
(C) வராஹமிகிரர்
(D) சுபந்து
ANSWER C
"காவ்ய தரிசனம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) விசாகதத்தர்
(B) தண்டின்
(C) காளிதாசர்
(D) பாரவி
ANSWER B
அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் இவரது அமைச்சர்…….. ஆவார்.
(A) ஆர்யபட்டர்
(B) வராகமிகிரர்
(C) சரகர்
(D) அரிசேனர்
ANSWER D
கீழ்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தி உள்ளது?
(A) அர்த்தசாஸ்திரம் - மெகஸ்தனிஸ்
(B) இண்டிகா - கௌடில்யர்
(C) ஷர்ஷசரிதம் - பாணர்
(D) ரெத்தினாவளி - சந்திரகுப்தமௌரியர்
ANSWER C