அடிக்கடி கேட்கப்படும் முதன்மையான கேள்விகள்
வரலாறு - கற்காலம்
பழம்பொருள் மற்றும் சுலைப்பொருட்கள் சட்டம் 1972 - இன் படி தொன்மை வாய்ந்த பொருள் என்பது
1. கலைநுணுக்க வேலைப்பாடுடன் கூடிய நாணயம், சிற்பம், ஓவியம் மற்றும் கல்வெட்டுக்கள்
2. தொன்மை வாய்ந்த கட்டிடம் மற்றும் குகையிலிருந்து பிரிக்கப்பட்ட பொருட்கள்
3. கலை, அறிவியல் கைவினைப் பொருட்கள், இலக்கியம், சமயம் தொடர்புடைய எந்த ஒரு பொருளும்
4. வரவாற்றுச் சிறப்புமிக்க எந்த ஒரு பொருளும்
(A) 1 மட்டும் சரி
(B) 2 மட்டும் சரி
(C) 3 மட்டும் சரி
(D) 1, 2, 3, 4 அனைத்தும் சரி
ANSWER D
தொல்பொருள்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம், இந்தியக் குடியரசின் எத்தனையாவது ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது?
(A) 16
(B) 23
(C) 20
(D) 24
ANSWER D
யாருக்காக நடுகல் அமைக்கப்பட்டது ?
(A) அரசனுக்காக
(B) போர் புரியும் மறவனுக்காக
(C) போரைச் சந்து செய்யும் புலவனுக்காக
(D) வீரமரணமடைந்த வீரனுக்காக
ANSWER D
சென்னை அருங்காட்சியகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
(A) 1857
(B) 1851
(C) 1887
(D) 1824
ANSWER B
அகழாய்வுப் பதிவுகள் எத்தனை முறைகளில் பின்பற்றப்படுகின்றது?.
(A) 5
(B) 6
(C) 7
(D) 4
ANSWER C
சேர அரசர்களின் மரபு வழியைத் தெரிவிக்கும் கல்வெட்டு
(A) பூலாங்குறிச்சி கல்வெட்டு
(B) அறச்சலூர் கல்வெட்டு
(C) பட்டிபுரோலு கல்வெட்டு
(D) புகழூர் கல்வெட்டு
ANSWER D
கூற்று (A) : குகைகளில் கண்டெடுக்கப்பட்டதால் இக்கல்வெட்டுகளைக் குகைக் கல்வெட்டுகள் என்பர்
காரணம் (R) : பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பதால் பிராமிக் கல்வெட்டுகள் என்பர்
(A) (A) மற்றும் (R) சரி (A) விற்கான சரியான விளக்கம் (R)
(B) (A) சரி ஆனால் (R) தவறு
(C) (A) சரி ஆனால் (A) விற்கான விளக்கம் (R) என்பது தவறு
(D) (A) தவறு (R) சரி
ANSWER A
தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெறும் பெயர்களைப் பொருத்துக:
(a) அரிக்கமேடு 1. நெடுஞ்சாத்தன்
(b) திருப்பரங்குன்றம் 2. நெடிஞ்சாழியான்
(c) புகழூர் 3. அகல்
(d) கழுகுமலை 4. பிடந்தை
(a) (b) (c) (d)
(A) 2 4 3 1
(B) 3 2 4 1
(C) 3 1 4 2
(D) 2 3 1 4
ANSWER C
புதுக்கோட்டைப் பகுதியில் பெருங்கற்காலச் சின்னங்களைக் குரக்குப் பட்டடை என்பர். இதில் ''குரக்கு' என்பதன் பொருள் என்ன?
(A) பாதுகாத்தல்
(B) விளையாடுதல்
(C) மண்ணைத் தோண்டுதல்
(D) மண்ணை மூடுதல்
ANSWER C
மலைக் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்ந்தவர்கள்
(A) பழைய கற்கால மக்கள்
(B) நுண்கற் கருவிக்கால மக்கள்
(C)புதிய கற்கால மக்கள்
(D)பெருங்கற்கால மக்கள்
ANSWER A
பெருங்கற் புதை குழிகள் கீழ்க்காணும் வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்தன
1. குழிவட்டங்கள்
2. குகைவட்டங்கள்
3. சதுரம்
4. செவ்வகம்
(A) 4 மட்டும் சரி
(B) 3 மட்டும் சரி
(C) 1. 2 சரி
(D) 3, 4 சரி
ANSWER C
பல தொல் சின்னங்களைக் கண்டுபிடித்த பள்ளி ஆசிரியர்களின் அமைப்பு
(A) நகர் அமைப்பு
(B) இலக்கியப் பேரவை
(C) தகடூர் வரலாற்றுப் பேரவை
(D) வாலியர் இருப்பு
ANSWER C